ஜப்பானை சேர்ந்த டோகோ என்பவர் மிகப்பெரிய தொகையை செலவு செய்து ஒரு நாயாக மாறியுள்ளார்.
அந்த நபர் தனது மனித உருவத்தில் இருந்து நாயாக மாறுவதற்கு 22 ஆயிரம் யென் செலவு செய்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 12 லட்சம் மேல் செலவிட்டுள்ளார்.
ஜப்பானை சேர்ந்த டோகோ என்பவருக்கு சிறு வயது முதலே நாய்கள் மீது தீராத காதல். நாயாக பிறந்திருக்கலாம் என்று அடிக்கடி நண்பர்களிடம் கூறிக்கொண்டே இருப்பாராம். திடீரென ஒரு நாள் நாயாகவே மாறி அதிர்ச்சியையும் தந்துள்ளார்.
தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களுக்கான ஆடைகளை உருவாக்கும் ஜப்பானிய நிறுவனமான ஜெப்பெட் டோகோவை நாயாக மாற்றி உள்ளது.
இவவாறு உருவாக்க 40 நாட்கள் ஆகியிருக்கிறது. தத்ரூபமாக தெரியும் சிலைகள், உடைகள், 3-டி மாடல்கள் போன்றவற்றை உருவாக்குவதில் இந்த நிறுவனம் புகழ்பெற்று விளங்குகிறது.
டோகோ கூலி இனத்தை சேர்ந்த நாயை போல வடிவமைக்கப்பட்டு உள்ளார். இது நான்கு கால்களில் நடக்கும் உண்மையான நாயின் தோற்றத்தை உருவாக்குகிறது” என்று ஜெப்பெட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் சொல்கிறார்.
அந்த நபர் தனது யூடியூப் சேனலில் முதல் முறையாக தான் நாய் உருவத்துக்கு மாறியிருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். நான் மிருகமாக இருக்க விரும்புகிறேன் என்ற தலைப்பில் இந்த வீடியோவை பதிவேற்றியுள்ளார்.
இந்த வீடியோவை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர். இந்த வீடியோ ஜெர்மன் தொலைக்காட்சிக்காக ஒரு வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது.
ஆனால் சமீபத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. நாயாக மாறி உள்ள டோகோ, மற்றவர்கள் கொடுக்கும் போலி மரியாதையை விரும்பாததால், தனது மனித அடையாளத்தை மறைக்க விரும்பியதாகவும் தனது வாழ்நாள் கனவு நிறைவேறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!