ஆடி மாத செவ்வாய், வெள்ளி, ஞாயிறு வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்?

ஆடி மாத வெள்ளி கிழமைகளுக்கு சிறப்பு மகத்துவம் உள்ளது. ஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக்கம். தேவர்களின் இரவுக்காலமாக இதனை கருதுவர்.

ஆடி மாதத்தை சக்தி மாதம் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தட்சிணாயணம் துவங்குமாடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும்.

உயிர்களுக்கு ஆதார சக்தியை அதிகமாக தரும் மாதம் ஆடி மாதம் ஆகும். ஆடி மாதம் அம்பிகைக்கு உகந்த மாதம். மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் காலம்.

ஆடி மாத செவ்வாய், வெள்ளி, ஞாயிற்று கிழமைகள் வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சக்தியை விட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும்.

ஆடி செவ்வாய் என்பது, கோவில்களுக்கு சென்று அம்மனை முறைப்படி வழிபட வேண்டிய தினம். ஆடி வெள்ளி என்பது, நம் முன்னோர்களோடு சேர்த்து அம்மனை வழிபடவேண்டிய தினம். ஆடி ஞாயிறு என்பது, அன்னதானத்திற்கு உகந்த தினம்.

ஆடி மாதம் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகிவிடுவார் என்பது ஐதீகம். முதன்மையான சிறப்பு ஆடி மாதம் அம்மனுக்கு உரியது. ஆடி மாத அம்மன் வழிபாடு என்பது தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஒட்டி வந்த ஒன்று.

ஆடி மாதம்முழுவதும் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட உகந்தது. மாரியம்மன் என்றாலே அனைவருக்கும் உடனே ஞாபகம் வருவது திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் தான்.

பக்தர்கள் கூட்டத்திற்கு எப்போதும் குறைவில்லை என்றாலும், ஆடி வெள்ளிகிழமைகளில் கூட்டம் கட்டுக்கடங்காது. பக்தர்கள் வேண்டியதை நிறைவேற்றும் கோட்டை மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெறும்.

அன்றையதினம் மாரியம்மனை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து பக்தி பரவசம் அடைவர்.

இந்நாளில் அம்மனிடம் என்ன வேண்டினாலும் நிறைவேற்றி கொடுக்கிறாள். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இத்தலத்தில் வேண்டிக்கொண்டு குணமடைவது மிகவும் பிரசித்தி பெற்றது.

இத்தலத்திலேயே குறிப்பிட்ட நாட்கள் தங்கி, அங்கு ஊழியம் செய்து, நேற்றிக்கடனை நிறைவேற்றலாம். உடல் உறுப்புகள் குறைபாடுள்ளவர்கள் , கண்பார்வை குறையுள்ளவர்கள் இத்தலத்தில் வணங்கி குணமாகின்றனர். வியாபார விருத்தி, விவசாய செழிப்பு ஆகியவற்றுக்காகவும் இத்தலத்துக்கு பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!