வீட்டில் பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரவீந்திர மகாஜனி மர்ம மரணம்!

பாலிவுட்டில் பழம்பெரும் நடிகராக அறியப்படுபவர் ரவீந்திர மகாஜனி (வயது 77). அவர், மும்பை சா பாஜ்டார், ஜூன்ஜ், கலத் நகாலத் உள்ளிட்ட மராத்தி படங்களில் நடித்து உள்ளார்.

2019-ம் ஆண்டு வெளியான அஷுதோஷ் கவுரிகரின் பானிபட் என்ற படத்திலும் அவர் நடித்து உள்ளார்.

இந்த படத்தில் அர்ஜுன் கபூர் மற்றும் கிரித்தி சனோன் ஆகியோர் முன்னணி நடிகர்களாக நடித்து உள்ளனர். இந்த நிலையில், நடிகர் ரவீந்திர மகாஜனி அவரது இல்லத்தில் மர்ம மரணம் அடைந்து கிடந்து உள்ளார்.

அவரது உடல் கண்டெடுக்கப்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்பு, உயிரிழந்து இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

அவரது குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வந்ததும், அதனை கவனித்த அண்டை வீட்டுக்காரர்கள் போலீசை தொடர்பு கொண்டு உள்ளனர்.

இதனை தொடர்ந்து, போலீசார் உடனடியாக அவரது இல்லத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

அதன்பின்னரே, அவரது மரணத்திற்கான காரணம் பற்றி கண்டறியப்படும். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!