மணமகன் தேவை… பெண்ணின் வித்தியாசமான அறிவிப்பு!

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஈவ் டில்லி-கோல்சன் (Eve Tilley-Coulson – 35). வழக்கறிஞரான இவர் தனது டிக் டாக் பக்கத்தில் மணமகன் தேவை என்பது குறித்து வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அவரின் அந்தப் பதிவில், “கடந்த ஐந்து ஆண்டுகளாக தனிமையில் இருக்கிறேன். டேட்டிங் செய்து சோர்வடைந்துவிட்டேன். எனக்கு விருப்பமானவரை டேட்டிங் ஆப் மூலமோ அல்லது நேரிலோ சந்தித்தாலும் அது பெரிதாக பலனளிக்கவில்லை.

மேலும், கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு டேட்டிங் கலாசாரத்தில் வித்தியாசமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

டேட்டிங் ஆப்பில் இருப்பவர்களும் உண்மையான டேட்டிங்குக்காக வருவதில்லை. அதைத் தீவிரமாகவும் எடுத்துக்கொள்வதில்லை. அதனால், எனது தேவைகளைப் பூர்த்தி செய்து, எனது உண்மையான உறவுக்குத் தயாராக இருக்கும் ஒரு ஆணைத் தேடி திருமணம் செய்துகொள்வது என முடிவுசெய்திருக்கிறேன்.

அதற்காக எனக்கு மணமகனை அறிமுகப்படுத்தி, நான் அவரையே திருமணம் செய்துகொண்டால், எனக்கு என்னுடைய கணவரை அறிமுகப்படுத்தியவர்களுக்கு 5,000 டாலர் (ரூ.4 லட்சம்) அன்பளிப்பாக வழங்குவேன்.

நான் அவருடன் நீண்டகாலம் இருப்பேன் என்றெல்லாம் இல்லை. எங்கள் திருமணம் முடிந்து 20 வருடங்களில் நான் அவரை விவாகரத்து செய்துவிடக்கூடிய சூழல் உருவாகலாம்.

எனது வருங்காலக் கணவரிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள், அவருக்கு 27 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அவரின் உயரம் 5 – 11 அடி இருக்கலாம்.

நான் உயரமாக இருப்பதால் எனது கணவரும் உயரமாக இருக்க வேண்டும். ஏனென்றால் நான் டேட்டிங் செய்த சிலர், அவர்கள் குள்ளமாக இருந்ததால், நான் ஹீல்ஸ் அணியக் கூடாது எனக் கூறினார்கள். எனக்கு அது பிடிக்கவில்லை.

மேலும், அவர் நகைச்சுவை உணர்வும், அன்பும் கொண்டவராக இருக்க வேண்டும். அரசியல் பார்வைகள், மத நம்பிக்கைகள் மற்றும் இனம் ஆகியவை எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

ஆனால், நான் திருமணம் செய்துகொள்ளும் ஆண் போதைப்பொருள் உட்கொள்வதை நான் விரும்பவில்லை. திருமணச் சான்றிதழில் கையொப்பமிட்டவுடன் உங்களுக்கான பணத்தைத் தந்துவிடுவேன்” எனத் தெளிவாகக் கூறியிருக்கிறார்.

அவரின் இந்த வீடியோ கலவையான விமர்சனங்களுடன் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.-News & image Credit: vikatan * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!