உலகை உலுக்கிய மர்மம் அவிழ போகிறது… 5 கோடீஸ்வரர்களை பலி கொண்ட டைட்டன் கப்பல்!

ஆழ்கடல் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் வாய்ந்த ஓசியானிக் எக்ஸ்பெடிஷன்ஸ் எனும் நிறுவனத்தின் டைட்டன் எனும் சிறிய ரக நீர்மூழ்கி கப்பல் ஒன்றில், கடலுக்குள் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலை காண 5 பேர் கொண்ட குழு சென்றது.

வட அட்லாண்டிக் கடலின் கேப் கோட் எனும் இடத்திலிருந்து, கிழக்கே 900 மைல் தொலைவில் சுமார் 13,000 அடி ஆழத்தில், அதனிடமிருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டு காணாமல் போனது.

நீண்ட தேடுதலுக்கு பின், துரதிர்ஷ்டவசமாக, அது வெடித்து சிதறியதாகவும், இதில் பயணித்த அனைவரும் பலியானார்கள் எனவும் அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த பயங்கர விபத்து குறித்து அமெரிக்க கடலோர காவல்படை விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், 5 பேரை பலி கொண்ட டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் சிதைந்த பாகங்கள் அட்லாண்டிக் கடலின் ஆழமான பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

அவை கனடாவின் ஆர்டிக் ஹாரிசான் கப்பல் மூலம் செயின்ட் ஜான்ஸ் நியூபவுண்ட் லேண்ட் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் சிதைந்த பாகங்கள் கிரேன் மூலம் வாகனத்தில் ஏற்றி செல்லப்பட்டன.

அட்லாண்டிக் கடலில் ஆயிரத்து 600 அடி ஆழத்தில் இருந்த மீட்கப்பட்ட சிதைந்த பாகங்களை அமெரிக்கா மற்றும் கனடாவை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

அதன் முடிவில் டைட்டன் நீர்மூழ்கி கப்பல் விபத்துக்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நீர்மூழ்கிக் கப்பல் ஏன் வெடித்தது என்பதற்கான விசாரணையின் முக்கிய பகுதியாகும் என தெரிவித்தது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!