‘ஸ்கால்ப்’ ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ‘மாஸ்க்

சீரான மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு ‘ஸ்கால்ப்’ எனப்படும், தலைப்பகுதியில் இருக்கும் சரும அடுக்கை சுகாதாரமான முறையில் பராமரிப்பது முக்கியம்.

ஸ்கால்ப் பகுதியில் மயிர்க்கால்கள், செபேசியஸ் எனும் எண்ணெய் சுரப்பிகள் மற்றும் வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன.

இவற்றில் இருந்து உற்பத்தியாகும் வியர்வை மற்றும் எண்ணெய்யுடன் காற்றில் இருக்கும் தூசிகள் கலந்து உருவாகும் அழுக்கு, ஸ்கால்ப் முழுவதும் படியும்.

இதை அவ்வப்போது சரியான முறையில் சுத்தம் செய்யாவிட்டால் கிருமித் தொற்று, தலைமுடி வறட்சி, முடி உதிர்வு, பொடுகு, பேன் தொல்லை, தோல் தடிப்பு, அழற்சி, பூஞ்சைத் தொற்று, அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற பல பிரச்சினைகள் உண்டாகும். இதைத் தவிர்க்க சில எளிய வழிகளைப் பின்பற்றலாம். அவை:

‘ஸ்கால்ப்’ ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ‘மாஸ்க்’ :

மரச்செக்கு மூலம் தயாரிக்கப்பட்ட விளக்கெண்ணெயை மிதமாக சூடுபடுத்தி ஸ்கால்ப் முழுவதும் தடவவும். பின்பு விரல் நுனியால் வட்ட இயக்கத்தில் மென்மையாக மசாஜ் செய்யவும்.

15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளிக்கவும். 1 டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடி, 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளவும்.

இரண்டையும் நன்றாகக் கலந்து தலைமுடியின் வேர்க்கால்களில் தடவவும். பின்னர் ஸ்கால்ப் முழுவதும் மென்மையாக மசாஜ் செய்யவும். 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1 டீஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறு, 1 முட்டை, ½ கப் தயிர், இவை எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து விரல் நுனிகள் மூலம் எடுத்து ஸ்கால்ப் முழுவதும் தடவவும்.

பின்பு, சூடான தண்ணீரில் நனைத்துப் பிழிந்த துண்டை தலையை மூடியவாறு கட்டிக்கொள்ளவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளிக்கவும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!