முதல் படம் வெளியாகும் முன்பே மலையாள இயக்குனர் திடீர் மரணம்!

மலையாள திரையுலகின் புதுமுக இயக்குனர் பைஜூ பரவூர் (வயது 42). இவர் ‘ரகசியம்’ என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார்.

இதன் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதி கட்ட பணிகள் நடந்து வந்தது. இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை இயக்குனர் பைஜூ பரவூருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பைஜூ பரவூர் இயக்கிய முதல் படம் வெளியாகும் முன்பு அவர் மரணத்தை தழுவியது அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!