கர்ப்ப காலத்தில் இவற்றை எல்லாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும்..!


ஒரு பெண் கர்ப்பம் ஆனதும், அவளது வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டியது அவசியம்.

அதற்கு உணவுக் கட்டுப்பாடு என்பது மிகவும் அவசியம். அதனால் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்த பின், ஒரு சில பழங்கள் மற்றும் காய்கறிகளை தவிர்க்க வேண்டும். அவை என்னவென்று இப்போது பார்ப்போம்.


01. பப்பாளிப் பழம்
கர்ப்பமாக இருக்கும் போது ஒரு பெண் பப்பாளிப் பழம் உண்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பிரசவ திகதிக்கு முன்னரே பிரசவம் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகளை இந்த பப்பாளிப்பழம் ஏற்படுத்துகின்றது. எனவே முதல் மூன்று மாதங்கள் மற்றும் கடைசி மாதத்தில் பப்பாளிப் பழம் உட்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.


02. அன்னாசிப் பழம்
அன்னாசிப் பழத்தில் உள்ள அதிகப்படியான ப்ரோமிலைன் கர்பிணிகளுக்கு உகந்ததல்ல. ஏனெனில் கர்ப்பிணி ஒருவரின் உடலில் ப்ரோமிலைன் சேரும் பட்சத்தில் அது கருவை கலைத்து விடும்.


03. கத்தரிக்காய்
கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் மாதவிடாயை வரவழைப்பதால் அது வயிற்றில் உள்ள குpந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.


04. பெருஞ்சீரகம்
கர்ப்ப காலத்தில், பெருஞ்சீரகம் மற்றும் மல்லி விதைகள் என்பன தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில், இவை அதிகளவில் தாயின் உடலில் சேரும் பட்சத்தில் கருப்பையின் வலியையை குறைக்கும் வாய்ப்புக்கள் உண்டு.


05. வெந்தயம்
வெந்தயத்தில் உள்ள தாதுக்கள் கருப்பையை வலுவிழக்கச் செய்து அலர்ஜியை உண்டாக்கி வயிற்றில் உள்ள குழந்தையின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும். எனவே கர்ப்பமாக இருக்கும் போது வெந்தயத்தை தவிர்ப்பது சிறந்தது.


06. முட்டை
கருவுற்றுள்ள தாய்மார்கள் பச்சை முட்டை மற்றும் ஆஃப் பாயில் என்பவற்றை உண்ணுவதை தவிர்க்க வேண்டும். முட்டையில் உள்ள சால்மனெல்லா என்ற பக்டீரியா தாய் உண்ணும் உணவுகளை விஷமாக்கி விடும். அதனால் வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைவலி மற்றும் வயிற்று வலி என்பன ஏற்படும்.


07. முளைகட்டிய பயிறு
பயிறு மற்றும் தானிய வகைகள் ஆரோக்கியமானதாக இருந்தாலும், முறைகட்டிய பயிறு வகைகளை பச்சையாக அப்படியே சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள பக்டீரியா தாயின் உடலில் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.– © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!