அமெரிக்க அதிபரை கொல்ல முயன்றதாக இந்திய வம்சாவளி கைது!

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வெள்ளை மாளிகை அருகே நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் லாரி ஒன்று தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, லபாயெட் சதுக்க பகுதியில் உள்ள சாலை மற்றும் நடைபாதையை அதிகாரிகள் மூடினர். மேலும், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனரை அமெரிக்க உளவு துறை அதிகாரிகள் உடனடியாக கைது செய்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்காவுக்கான உளவு துறையின் தலைமை தகவல் தொடர்பு தலைவர் அந்தோணி குக்லியெம்லி கூறினார்.

பாதுகாப்பு குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதனை அமெரிக்காவுக்கான உளவு துறையின் தலைமை தகவல் தொடர்பு தலைவர் அந்தோணி குக்லியெல்மி கூறியுள்ளார்.


மேலும், விபத்து பகுதியில் இருந்து நாஜிக்களின் கொடி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. அதுபற்றியும், அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை. வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர் இந்திய வம்சாவளியான மிசோரி, செஸ்டர்ஃபீல்டு பகுதியைச் சேர்ந்த சாய் வர்ஷித் கந்துலா (19) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பார்க் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட நபர் மீது ஆபத்தான ஆயுதத்தால் தாக்குதல், மோட்டார் வாகனத்தை பொறுப்பற்ற முறையில் இயக்குதல், ஜனாதிபதி, துணைத் தலைவர் அல்லது குடும்ப உறுப்பினர் மீது கொலை மிரட்டல் அல்லது கடத்தல் அல்லது தீங்கு விளைவித்தல், கூட்டாட்சி சொத்துகளை அழித்தல் மற்றும் அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!