பணிப்பெண்ணான தாயை நடுவானில் நெகிழ வைத்த மகள்!

அன்னையர் தினத்தையொட்டி இண்டிகோ விமான நிறுவனத்தால் பகிரப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அதில், இண்டிகோ விமான பணிப்பெண் தன்னை நபிரா சம்சி என்று அறிமுகப்படுத்தி கொண்டு தொடங்குகிறார்.

பின்னர் அதே விமானத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றும் தனது தாய் ராம் சம்சியை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்வதாக கூறி அவரை அழைக்கிறார். தொடர்ந்து, தனது தாயார் 6 வருடங்கள் கேபின் குழுவினராக வேலை செய்வதை பார்த்து வருவதாகவும், அவர் எனக்கு ஒரு உத்வேகமாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

அவருக்கு முன்னால் நானும் ஒரு விமான பணிப்பெண்ணாக நிற்பதில் பெருமை கொள்வதாக கூறி தனது அன்னைக்கு அன்பு முத்தம் கொடுக்கிறார். அப்போது அவரது தாயின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வழிந்தோடுகிறது.

நபிரா இந்த அறிவிப்பை முடித்ததும் பயணிகள் இருவரையும் ஆரவாரம் செய்து, கை தட்டி பாராட்டுகின்றனர். இந்த வீடியோ அதிகமான பார்வைகளை குவித்து வருகிறது.

ஏராளமானோர் உணர்ச்சிபூர்வமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!