கணவனுக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்று விட்டு மது விருந்துடன் கொண்டாடிய மனைவி!

அமெரிக்காவில் கணவரை மெல்ல சாகும் விஷம் வைத்து கொலை செய்த மனைவி, தோழிகளுக்கு விருந்து வைத்து கொண்டாடி உள்ளார்.

அமெரிக்காவின் உத்தா மாகாணத்தில் காமஸ் நகரில் வில்லோ கோர்ட்டு பகுதியில் வசித்து வந்தவர் எரிக் ரிச்சின்ஸ். இவரது மனைவி கவுரி டார்டென் ரிச்சின்ஸ். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 4-ந்தேதி எரிக், வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். எனினும், இந்த விசயத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதில், ஓராண்டுக்கு பின்னர் எரிக் மரண வழக்கில் திடுக்கிடும் உண்மை வெளிவந்து உள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் காதலர் தினத்தில், கவுரி தனது வீட்டில் வைத்து கணவர் எரிக்குக்கு வோட்கா மதுபானம் கலந்து கொடுத்து உள்ளார். அதனை குடித்து, எரிக் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். எனினும், இந்த முறை அவர் தப்பி விட்டார்.

அதன்பின்னர், கடந்த மார்ச் 4-ந்தேதி இரவில் போலீசாருக்கு அழைப்பு வந்தது. அதில் தனது கணவர் மயக்கமடைந்து கிடக்கிறார் என கவுரி போலீசிடம் பதறியபடி கூறியுள்ளார். அவர்கள் வந்தபோது எரிக் உயிரற்று கிடந்து உள்ளார்.

இந்த விசயத்தில், கவுரி திட்டமிட்டு கணவரை படுகொலை செய்து உள்ளார். இதுபற்றிய கோர்ட்டு ஆவணத்தில், பிப்ரவரியில் யாரோ சிலருக்கு போனில் குறுஞ்செய்தி வழியே வலி நிவாரண மருந்து அனுப்பும்படி கவுரி கேட்டு உள்ளார்.

ஹைடிரோகோடோன் மருந்துகளையும் வாங்கி இருக்கிறார். அதன்பின் இதனை விட சற்று வலுவான மருந்துகள் வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். 3 நாட்கள் கழித்து, அவர் விரும்பிய மருந்துகள் அவருக்கு கிடைத்து உள்ளன. அதன்பின் 3 நாட்கள் கழித்து கணவருடன் சேர்ந்து காதலர் தினம் கொண்டாடி உள்ளார்.

ஆனால், இரவு உணவுக்கு பின்னர் எரிக் உடல்நலம் பாதிக்கப்பட்டபோதும், தப்பிய நிலையில் 2 வாரத்திற்கு பின்னர், பென்டனைல் எனப்படும் மருந்துகளை கூடுதலாக கவுரி வாங்கி உள்ளார்.

இந்த முறை அதனை கலந்து கொடுத்ததில் எரிக் உயிரிழந்து உள்ளார். கணவரை திட்டமிட்டு கொலை செய்த பின்னர், வீட்டை அவர் மூடியுள்ளார்.

அதன்பின் மறுநாள்,தனது தோழிகளை அழைத்து மது, உணவு என விருந்து வைத்து கொண்டாடி உள்ளார். இந்த சம்பவத்தில் கவுரி மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட மருந்து பொருட்களை மறைத்து வைத்த குற்றச்சாட்டும் அவர் மீது பதிவாகி உள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவெனில், அவர் மரணம் அடைந்து ஓராண்டுக்கு பின்பு, குழந்தைகளுக்கான புத்தகம் ஒன்றை கவுரி வெளியிட்டார்.

என்னுடன் நீங்கள் இருக்கிறீர்களா? என்ற தலைப்பு கொண்ட அந்த புத்தகம் அமேசானில் விற்பனைக்கு வந்தது. அதற்கான விவர குறிப்பில், அன்புக்குரிய ஒருவரை இழந்த கடினம் வாய்ந்த அனுபவ சூழலிலும், இந்த புத்தகம் குழந்தைகளுக்கு மென்மையான முறையில் வழிகாட்டுகிறது.

இந்த சவாலை தனிப்பட்ட முறையில் சந்தித்த அன்பான ஒரு தாயால் எழுதப்பட்ட புத்தகம் இது என குறிப்பிடப்பட்டு உள்ளது. இளைய வயதினருக்கு சவுகரியம் ஏற்படும் வகையில் புத்தகம் வடிவமைக்கப்பட்டு உள்ளது என அதில்குறிப்பிட்டு உள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!