உலக சாதனையை முறியடித்த திருமண ஆடை – 50 ஆயிரத்திற்கும் அதிகமான படிகங்கள்!

சில நேரங்களில் ஆடம்பர திருமணங்கள் மட்டுமல்ல அந்த திருமணங்களில் மணமகள்கள் உடுத்தும் ஆடையும் டிரெண்டிங் ஆகி விடும்.

அந்த வகையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்வரோவ்ஸ்கி படிகங்களுடன் தைக்கப்பட்ட ஒரு நேர்த்தியான திருமண ஆடை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த மாதம் 14-ந்தேதி அன்று மிலனில் நடைபெற்ற ஒரு பேஷன் ஷோவில் இந்த ஆடை அறிமுகமானது. இந்த ஆடையில் 50,890 ஸ்வரோவ்ஸ்கி படிகங்கள் உள்ளன.

இந்த ஆடை இத்தாலியில் பிரபல திருமண ஆடை தயாரிக்கும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.

குறிப்பாக ரவிக்கையில் ஆயிரக்கணக்கான படிகங்கள் தைக்கப்பட்டுள்ளது. இதை தைப்பதற்காக மட்டும் 200 மணி நேரம் ஆகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு இஸ்தான்புல்லில் 45 ஆயிரம் படிகங்களுடன் ஒரு ஆடையை துருக்கியை சேர்ந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி கின்னஸ் சாதனை படைத்து இருந்தது.

தற்போது இந்த ஆடை, பழைய கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!