இத்தனை கோடிக்கு வீடு வாங்கினாரா நடிகை ஆலியா பட்..?

இந்தி நடிகை ஆலியா பட் கடந்த ஆண்டு நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டார்.

அவர் மும்பை பாந்திரா பாலிஹில் பகுதியில் ஏரியல் வியூ என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் ரூ.38 கோடிக்கு வீடு வாங்கி உள்ளார்.

2 ஆயிரத்து 497 சதுர அடி உள்ள வீட்டை அவர் தனது தயாரிப்பு நிறுவன பெயரில் வாங்கி உள்ளார்.

அவருக்கு கோல்டு ஸ்ட்ரிட் நிறுவனம் வீட்டை விற்பனை செய்து உள்ளது. அதே கட்டிடத்தில் கணவர் வீடு வீட்டுக்கான பத்திரப்பதிவு செலவு மட்டும் ரூ.2.26 கோடி ஆகி உள்ளது. ஆலியா பட்டின் கணவர் ரன்பீர் கபூருக்கும் அதே கட்டிடத்தில் வீடு உள்ளது.

அந்த வீட்டை ரன்பீர் கபூர் கடந்த 2016-ல் ரூ.35 கோடிக்கு வாங்கியிருந்தார்.

நடிகை ஆலியா பட் இயக்குனர், தயாரிப்பாளரான மகேஷ் பட்டின் மகள் ஆவார். ஆலியா பட் ஆர்.ஆர்.ஆர்., கல்லிபாய், பிரமாஸ்திரா உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!