என்னால் அழக்கூட முடியவில்லை… மன அழுத்தம் குறித்து மனம் திறந்த நடிகை.!

கேரள திரைத்துறையில் பிரபலமானவர் ஸ்ருதி ரஜனிகாந்த் (வயது 27). இவர் மலையாள திரைப்படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், தான் கடுமையான மன அழுத்தத்தை சந்தித்துவருவதாகவும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஸ்ருதி ரஜனிகாந்த் மனம் திறந்து பேசியுள்ளார்.

மன அழுத்தம் குறித்து நடிகை ஸ்ருதி கூறுகையில், நான் மனதார சிரித்து வாரங்கள் ஆகுகிறது. எனது மனம் எதிர்மறை எண்ணங்களால் நிறைந்துள்ளது. என்னால் தூங்க முடியவில்லை.

அதை எப்படி கூறுவது என்று எனக்கு தெரியவில்லை. எனது சூழ்நிலையை நிறைய பேரால் புரிந்துகொள்ள முடியாது. நான் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது இரவில் என்னால் தூங்க முடியவில்லை.

ஆய்வில் தகவல் நான் எல்லா நேரமும் தொடர்ந்து அதீதமாக சிந்திக்கிறேன் (Overthinking). தொடக்கத்தில் நான் நிறைய அழுவேன். ஆனால், இப்போதெல்லாம் என்னால் அழக்கூட முடியவில்லை. என் தலைமுறையை சேர்ந்த நிறையபேர் இந்த பிரச்சினையை சந்தித்திருப்பார்கள்.

யாரேனும் மன அழுத்தத்தில் உள்ளீர்களா? என்று என் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து கருத்து ஒன்றை பதிவிட்டேன். மெசேஜ்களால் எனது இன்ஸ்டாகிராம் கணக்கின் இன்பாக்ஸ் பக்கம் நிரம்பிவிட்டது.

யாரும் மகிழ்ச்சியாக இல்லை. அனைவரும் தங்கள் முகத்தில் முகமூடி அணிந்துள்ளனர். நான் சரியாக இல்லை என்பதை யாரிடமாவது கூறுவதை சாதாரணமானதாக மாற்ற அனைவரும் முயற்சி செய்வோம்.

நாம் நன்றாக இல்லாதபோதும் நான் நன்றாக இருக்கிறேன் என்று கூறுவதை நாம் வழக்கமாக கொண்டுள்ளோம். பணம் இருக்கும்போதும் நாம் விரும்பும் நபர்களுடன், நாம் விரும்பும் வேலையில் நாம் நேரத்தை செலவிடமுடியாவிட்டால் என்ன பயன்? பணம் இல்லாதபோதும் நமது வாழ்க்கையை நாம் மகிழ்ச்சியாக கொண்டுசென்றால் அது அதிர்ஷ்டம்.

ஒருவரின் வாழ்க்கையில் உள்ள வலிகள் மற்றும் கடினங்களை ஒருவரிடம் கூறுவது கடினமானது. உங்களை பற்றி நீங்கள் மனம் திறந்து பேசினால் கலந்தாலோசனை (கவுன்சிலிங்) இந்த நேரத்தில் உதவியாக இருக்கும். அதுபோன்ற நபர்களிடம் நீங்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்’ என்றார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!