குளிர்காலத்தில் பொடுகுத்தொல்லை ஜாஸ்தியாகிடுச்சா..? எப்படி சரி பண்ணலாம்..?


பொடுகு தொல்லை பலருக்கு பெரிய பிரச்னையாக உள்ளது. தலையின் சருமம் வறண்டு போகவோ, எண்ணெய் அதிகமாக தலையில் தங்கியிருந்தாலோ தலைமுடி வறண்டு போவதோடு, பொடுகு வரவும் வாய்ப்புண்டு.

இது குளிர்காலங்களில் அதிகமாகிறது. இதனால் தலையில் அரிப்பும் ஏற்படலாம். பொடுகு வராமலிருக்க அல்லது பொடுகை அகற்ற சில எளிய முறைகளை உள்ளன.

ஜெல் , ஸ்ப்ரே, ஷாம்பூ ஆகியவை அதிகமாக உபயோகிப்பது. பர்மிங், கலரிங் ஆகியவற்றாலும் பொடுகு வரலாம்.

அடிக்கடி நீண்ட நேரத்திற்கு ஹேர் ட்ரையர் உபயோகிப்பது. கவலை, டென்ஷன் அதிகமானால் ஷாம்பூ போட்ட பிறகு சரியாக முடியை அலசாமல் இருப்பது போன்ற பல காரரணங்கள் உண்டு.

அதற்கு என்னதான் தீர்வு

ஆன்டி செப்டிக் தன்மை நிரம்பிய மூலிகைகளால் உருவான ஆயுர்வேத எண்ணெயை (அதில் வேப்பிலை, வெந்தயம், துளசி ஆகியவை கலந்தது) முடியின் வேரில் மென்மையாக அழுத்தித் தடவவும்.


அதே ஆன்டிசெப்டிக் எண்ணெயை முழுத் தலையிலும் சீராகத் தடவவும். வென்னீரில் டவலை ஊற வைத்து, பிறகு நீரைப் பிழிந்து விடவும். சீராக நீராவி முடிகளுக்குள் செல்லுமாறு அந்த டவலை தலையில் கட்டவும். 5 லிருந்து 10 நிமிடம் வரை அதை உலர விடவும்.

ஒரு கப் மருதாணியில் நெல்லிக்காய், சீயக்காய், ஒரு தேக்கரண்டி, வெந்தயம், வேப்பிலை, துளசி அரை தேக்கரண்டி எல்லாவற்றையும் பொடியாக கலக்கவும், எல்லாவற்றையும் தயிரில் கலந்து அல்லது பாதி எலுமிச்சை துண்டின் சாறுடன் கலந்து ஒரு கலவையை தயார் செய்து கொள்ளவும்.

இதை தலை முழுக்கத் தடவி ஒரு மணி நேரம் வரை வைத்திருக்கவும். இப்பொழுது இந்த ஆயுர்வேத ஷாம்புவால் தலையை கழுவிக் கொள்ளவும். இதை வாரத்திற்கு ஒரு முறை என 3 மாதங்கள் வரை தடவவும்.

இதனால் நிச்சயமாக பொடுகு விலகும். இதற்குப் பிறகும் தலையில் பொடுகு ஏற்பட்டால் உங்கள் உடல் கோளாறுதான் இதற்குக் காரணம். எனவே உங்கள் மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!