கையில் கருப்பு பட்டை… விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்கள் – காரணம் என்ன..?

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடி வரும் ஆஸ்திரேலியா கவாஜாவின் சதத்தால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட கேப்டன் பேட் கம்மின்ஸ் 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகு குடும்ப வேலை காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தார்.

அவர் சொந்த ஊருக்கு திரும்பியதற்கான காரணம் கூறப்படாமல் இருந்தது. இந்நிலையில், பேட் கம்மிஸின் தாயார் மரியா கம்மின்ஸ் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அவரது தாயின் உடல் நலம் குன்றியதன் காரணமாகவே அவர் ஆஸ்திரேலியா திரும்பி உள்ளார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் பேட் கம்மின்ஸின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இன்று நடைபெற்று வரும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியின் 2வது நாளான இன்று ஆஸ்திரேலிய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஒரே இரவில் மரியா கம்மின்ஸ் மறைந்ததில் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் சார்பாக, பாட், கம்மின்ஸ் குடும்பத்தினர் மற்றும் அவர்களது நண்பர்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆஸ்திரேலிய ஆடவர் அணி இன்று மரியாதை நிமித்தமாக கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடவுள்ளது. இவ்வாறு டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!