சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் திரைவிமர்சனம்!

டெக்னாலஜி மூலம் போனில் உருவாகும் பெண் காதலில் விழுந்து, அதனை ஏற்க மறுக்கும் நபரை பழிவாங்கும் படம் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்.

சிங்கிள் பசங்க காதலிப்பதற்காக பிரத்யேகமாக போனில் மட்டும் பேசக்கூடிய ஒரு பெண்னை விஞ்ஞான வளர்ச்சியில் பல கோடி ரூபாய் செலவில் ஷாரா கண்டுபிடிக்கிறார்.

இந்த கண்டுபிடிப்புக்காக பக்ஸ், பல கோடி பணத்தை ஷாராவுக்காக செலவு செய்கிறார். போனில் பேசுவதற்காகவும் சிங்கிள் பசங்களின் தேவைகளை தீர்த்து வைப்பதற்காகவும் பல நாட்கள் செலவு செய்து பிறகு சிம்ரன் (மேகா ஆகாஷ்) என்ற ஒரு பெண்ணை போனில் வடிவமைக்கிறார்.

ஷாரா வடிவமைத்த சிம்ரன் போனை வெளியே கொண்டு செல்ல அப்போது இருவர் அந்த போனை திருடி சென்று வடுகின்றனர். பிறகு அந்த போனை ஒரு விலைக்கு கடையில் விற்றுவிடுகின்றனர்.

இதனிடையே இன்ஜினியரிங் படித்துவிட்டு டெலிவரி பாய்யாக வேலை பார்த்து வருகிறார் சிவா. அவ்வப்போது அவருடைய நண்பர் மா.கா.பா.ஆனந்த்திடம் தேவைகளுக்காக பணம் பெறுகிறார்.

ஒருநாள் இவருடைய மொபைல் போன் உடைந்து போக அவரிடம் பணம் பெற்றுக் கொண்டு மொபைல் வாங்க செல்கிறார் சிவா. மலிய விலையில் சிவா போன் கேக்க இவரிடம் அந்த சிம்ரன் போனை கடைக்காரர் விற்றுவிடுகிறார்.

மறுபுறம் தொலைந்த சிம்ரன் போனை ஷாராவும், பக்ஸ் குழுவும் தேடுகின்றனர். மறுபுறம் சிவாவின் தேவைகளை சிம்ரன் பூர்த்தி செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் சிம்ரன் அவரை காதலிக்க தொடங்கி விடுகிறார். இதனை ஏற்காத சிவா வெறும் போன் மூலம் இருக்கும் உன்னால் உணர்வுகளை மட்டுமே கொடுக்க முடியும் என்னுடன் வாழமுடியாது என்று கூறி சிம்ரனை காதலிக்க மறுக்கிறார்.

பிறகு சிவா விரும்பும் பெண்ணையும் டெக்னாலஜியை வைத்து சிம்ரன் சேர்த்து வைக்கிறார். அந்த பெண்னை காதலிக்க தொடங்கிய பிறகு சிம்ரனிடம் நெருக்கம் காட்டுவதை சிவா குறைக்கிறார். இதனால் கோபமடையும் சிம்ரன், சிவாவுக்கு எதிராக செயல்படுகிறார்.

இதனால் பல பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் சிவா இதிலிருந்து எப்படி மீள்கிறார்? தொலைந்த சிம்ரன் போனை கண்டுபிடித்தார்களா? இறுதியில் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை. எதார்த்தமாகவும், காமெடி கலந்த கவுண்டர் டயலாக் அடித்து ரசிகர்களின் கைத்தட்டல்கள் பெறுகிறார் சிவா.

இவரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. டெலிவரி பாய்ஸ்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகளை காமெடியாக சொல்லி கவனம் பெறுகிறார். சிம்ரனாக வரும் மேகா ஆகாஷ் அழகாக நடித்துள்ளார்.

திரையில் நடிப்பை வெளிப்படுத்த ஸ்கோப் இருக்கும் காட்சிகள் இல்லை என்றாலும் சிம்ரன் கதாப்பாத்திரத்தை மேகா ஆகாஷ் தேர்வு செய்திருப்பது பாராட்டப்படுகிறது. வேறு கதாநாயகிகள் இதுபோன்ற கதாப்பாத்திரத்தை தேர்வு செய்திருக்க தயங்கியிருப்பார்கள்.

அஞ்சு குரியன் அவருடைய பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளார். அழகான நடிப்பின் மூலம் பாராட்டுக்களை பெறுகிறார். மேலும் ஷாரா, பாடகர் மனோ, மா.கா.பா.ஆனந்த், திவ்யா கணேஷ், தீனா, கல்கி ராஜா, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

படம் தொடங்குவதற்கு முன்பே, இதில் லாஜிக்கல் விஷயங்களை எதிர்பார்க்காதீர்கள் என்று டைட்டில் கார்ட் போட்டு விடுகிறார்கள். இதனாலேயே படம் முழுவதும் லாஜிக் இல்லாமலே இருக்கிறது. வித்யாசமான கதையாக இருந்தாலும் காட்சிகளில் ஓவர் லாஜிக் மீறல் இருப்பதால் சலிப்பை ஏற்படுத்துகிறது.

திரைக்கதை சற்று விறுவிறுப்பாக இருப்பதாலும் காமெடி பல இடங்களில் ஒர்க் அவுட் ஆகியுள்ளதாலும் படத்தை சற்று ரசிக்க வைத்து பாராட்டுக்களை பெறுகிறார் இயக்குனர் விக்னேஷ் ஷா பி.என். பாடகர் மனோவின் கதாப்பாத்திரத்தை அழகாக வடிவமைத்து இயக்குனர் கூடுதல் கைத்தட்டல் பெறுகிறார்.

கொடுத்த பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஆர்தர்.ஏ.வில்சன். லியோன் ஜேம்ஸின் பாடல்கள் ஓகே, பின்னணி இசை படத்தில் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

மொத்தத்தில் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் – சுமாரான போன்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!