நடிகர் மயில்சாமியின் மரணத்திற்கு காரணம் என்ன..? மருத்துவர்கள் கூறிய பகீர் தகவல்!

நடிகர் மயில்சாமியின் மரணத்திற்கான காரணம் குறித்து மருத்துவர்கள் கூறியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

57 வயது

57 வயதான நகைச்சுவை நடிகர் மயில்சாமி. தாவணிக் கனவுகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மிமிக்ரி கலைஞரான மயில்சாமி, மேடை நாடகக் கலைஞராக இருந்து தனது திறமையால் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். சென்னை சாலிகிராமத்தில் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார் மயில்சாமி.

மாரடைப்பு

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் மயில்சாமி. நல்ல நடிகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதராகவும் உதவும் குணம் கெபாண்டவராகவும் திகழ்ந்த மயில்சாமியின் மரணம் ஒட்டு மொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மகா சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கம் மேகநாதேஸ்வரர் கோவிலில் விடிய விடிய சிவ வழிபாடு செய்தார் மயில்சாமி.

மகா சிவராத்திரி

கோவிலில் நடைபெற்ற ட்ரம்ஸ் சிவமணியின் கச்சேரியிலும் கலந்து கொண்ட மயில்சாமி, அன்று அதிகாலை வீட்டிற்கு வந்து விட்டு மீண்டும் சிவன் கோவிலுக்கு புறப்பட்டார். அருகில் இருந்த டீ கடையில் டீ அருந்திய அவர் அங்கேயே நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஆட்டோவில் மயில்சாமியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமைனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மயில்சாமியின் உயிர் பிரிந்தது.

இதய பிரச்சனை

ஏற்கனவே இதய பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வந்த மயில்சாமி மாரடைப்பால் மரணமடைந்தாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். நடிகர் மயில்சாமி முன்னதாக இரண்டு முறை இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மயில்சாமியின் மரணம் குறித்து பிரபல தொலைக்காட்சியில் பேசிய மருத்துவர்கள் மயில்சாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து பேசியுள்ளனர்.
​ நோ… ஐஸ்வர்யாவுக்கு ரஜினி போட்ட ஆர்டர்!​

தூங்காமல் கண் விழித்திருப்பது

அதாவது சாதாரணமாகவே ஒவ்வொருவரும் ஏழரை மணி நேரம் முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்றும், இதய பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும் அதிக நேரம் தூங்காமல் கண் விழித்திருப்பது, அதிக ஸ்ட்ரெஸில் இருப்பது மாரடைப்பு ஏற்பட காரணமாக இருக்கும் என கூறியுள்ளனர். மேலும் இதய பிரச்சனை உள்ளவர்கள் பழக்கம் இல்லாத வகையில் உடம்புக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாக உடற்பயிற்சி செய்வதும் மாரடைப்பு ஏற்பட காரணமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அதிக சத்தம்

மேலும் திடீர் திடீரென அதிக சத்தம் வரும் இடங்களில் இருப்பதும் இதய பிரச்சனை உள்ளவர்களுக்கு மாரடைப்பு வர வழி வகுக்கும் என்றும் கூறியுள்ளனர். ஏற்கனவே இதய பிரச்சனை இருந்த நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு முழுக்க மயில்சாமி கண் விழித்திருந்தது கூட அவருக்கு மாரடைப்பு ஏற்பட காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நடிகர் சிரஞ்சீவி சர்ஜா, சேதுராமன், விவேக், நடிகர் புனீத் ராஜ்குமார், பாடகர் கேகே ஆகியோர் சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்த பிரபலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!