கமலின் நாடகம்… கிழித்து தொங்கவிட்ட பிரபல விமர்சகர்!

பிக்பாஸ் மேடையில் நடிகர் கமல்ஹாசன் போலித்தனமான நாடகத்தை அரங்கேற்றி வருகிறார் என பிரபல விமர்சகரான வலை பேச்சு பிஸ்மி கிழித்து தொங்கவிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன்களை ஆரம்பம் முதலே நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்திலேயே நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது விமர்சனத்துக்குள்ளானது.

இதை நடிகர் கமல்ஹாசனே பல முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்திருக்கிறார். பிக்பாஸ் மேடையை நடிகர் கமல்ஹாசன் தனது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்கிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

வலை பேச்சு பிஸ்மி

இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசனின் நடவடிக்கையை கடுமையாக விளாசியுள்ளார் பிரபல விமர்சகரான வலைப் பேச்சு பிஸ்மி. இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கடந்த வாரம் நடந்த லெட்டர் டாஸ்க் மற்றும் கமல் அதுகுறித்து பேசியதை வைத்து கிழித்து தொங்கவிட்டுள்ளார். தனது பேட்டியில் பிஸ்மி பேசியிருப்பதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியின் டாஸ்க்கே அவர்களை சார்ந்தவர்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்பதுதான்.

கண்ணீர் விடுகிறார் கமல்

அதில் விக்ரமன், அம்பேத்கருக்கு கடிதம் எழுதி தன்னை ஒரு அரசியல் ஞானி போல காட்டிக் கொண்டார். அதை பார்க்கும் போதே இவர் என்ன இவ்வளவு போலித்தனமாக இருக்கிறார் என்று தோன்றியது. வார இறுதியில் போட்டியாளர்களை சந்தித்த கமல், விக்ரமனிடம் நீங்கள் அம்பேத்கருக்கு கடிதம் எழுதினீர்கள் அல்லவா என கேட்டு அதைப்பற்றி பேசி அப்படியே கண்ணீர் விடுகிறார். இதன் மூலம் அம்பேத்கர் மீது அவருக்கு ரொம்ப அன்பு மரியாதை இருப்பது போல் காட்டிக் கொள்கிறார் கமல்.

மைக் மோகனை அழைப்பது போல்

அம்பேத்கர் மீது இவ்வளவு அன்பும் மரியாதையும் கொண்ட கமல் என்னைக்காவது அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு போய் மாலை போட்டு மரியாதை செலுத்தியிருப்பாரா? பின்னர் தனது தனது பாக்கெட்டில் இருந்து கடிதம் ஒன்றை எடுத்து படிக்கிறார்.

அன்புள்ள மோன் என்று அந்த கடிதம் ஆரம்பிக்கிறது.. மோகன்தாசு கரம்சந்த் காந்தியை ஏதோ மைக் மோகனை அழைப்பது போல் அழைக்கிறார். அந்த கடிதத்தை முடிக்கும் போது உங்கள் நான் என முடித்துள்ளார் கமல். அந்த பேப்பர் அறை மணி நேரத்திற்கு முன்புதான் பண்டிலில் இருந்து எடுத்தது போல் மடிப்பு கலையாமல் இருந்தது.

போலித்தனமான நாடகம்

ஆனால் அந்த கடிதத்தை 1995 ஆம் ஆண்டு எழுதியதாக கூறுகிறார் கமல் ஹாசன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்துதான் உங்கள் நான் என்று சொல்ல ஆரம்பிரத்தார். அதற்கு முன்பு வரை நம்மவர் கமல்ஹாசனாகதான் இருந்தார். பிக்பாஸ் மேடையில்தான் அரசியலுக்காக உங்கள் நான் என்று கூற ஆரம்பித்தார். பிக்பாஸ் மேடையை தனக்கு சாதமாக பயன்படுத்த இப்படி ஒரு போலித்தனமான நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் நடிகர் கமல்ஹாசன் என பிரபல விமர்சகரான பிஸ்மி விளாசியுள்ளார்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!