தமிழ் வாத்தியாக இருந்த விக்ரமனை இப்படியாகிட்டாரே..!

பிக் பாஸ் 6 வீட்டை இந்திரன் சந்திரன் கலைக்கல்லூரியாக மாற்றிய ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

பிக் பாஸ் 6 வீடு பள்ளியில் இருந்து கலைக்கல்லூரியாக மாறிவிட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 6 வீட்டை ஆரம்பப்பள்ளியாக மாற்றினார்கள். மாணவ, மாணவியர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்று நடந்து கொள்வதாக பார்வையாளர்கள் கிண்டல் செய்தார்கள். இதையடுத்து வீட்டை மேல்நிலைப்பள்ளியாக நேற்று மாற்றினார்கள். அப்படியும் பார்வையாளர்கள் கலாய்த்தனர். இந்நிலையில் கலைக்கல்லூரியாக மாறியிருக்கிறது பிக் பாஸ் வீடு.

மாணவர்கள்

இந்த பிக் பாஸ் வீடு இந்திரன் சந்திரன் கலைக்கல்லூரியாக மாறப் போகிறது என்று மைனா நந்தினி அறிவிப்பதுடன் ப்ரொமோ வீடியோ துவங்குகிறது. விஷுவல் கம்யூனிகேஷன் துறை சார்பாக வரவேற்கிறோம் என்று மாணவர்கள் வரவேற்கிறார்கள். 1980களில் இருக்கும் கல்லூரியாக கொண்டு வர வேண்டும் என்கிறார் மைனா நந்தினி.

விக்ரமன்

தமிழ் வாத்தியாக இருந்த விக்ரமனை தற்போது சைக்காலஜி ஆசிரியராக மாற்றிவிட்டார்கள். சிங்குச்சா சிங்குச்சா ரோஸ் கலரு சிங்குச்சானு சட்டை அணிந்திருக்கிறார் விக்ரமன். ஒன் சைடு லவ்விலேயே காலத்தை ஓட்டுபவராக விக்ரமனை காட்டியிருக்கிறார்கள். இது என்னய்யா அறம் பேசிக் கொண்டிருக்கும் மனிதருக்கு வந்த சோதனை என்கிறார்கள் பார்வையாளர்கள்.

நடனம்

கல்லூரியில் இரண்டு நடன ஆசிரியர்கள் இருக்க வேண்டுமாம். மாணவர்களுக்கு பரதம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக இருக்கிறார் மணிகண்டன். அவர் கெட்டப் வேற லெவலில் இருக்கிறது. 80ஸ் கெட்டப் கதிருக்கு தான் பொருத்தமாக இருக்கிறது எனலாம். மாணவ, மாணவியர் டான்ஸ் ஆடுவதுடன் ப்ரொமோ வீடியோ முடிகிறது.

டாஸ்க்

ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, ப்ரொமோ வீடியோக்களில் ஆண் போட்டியாளர்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அது ஏன்?. சரியான காமெடி டாஸ்காக இருக்கிறது. ஹேட்டர்கள் ஷிவினை பற்றி வதந்தி பரப்பி வருகிறார்கள். கதிர் செமயாக இருக்கார். விக்ரமன் கெட்டப் அருமை. இதயம் முரளி சார் மாதிரி ரோல் கொடுத்தா வைதேகி காத்திருந்தாள் விஜயகாந்த் கெட்டப்ல வருது. அறம் வெல்லும் என தெரிவித்துள்ளனர்.

தனலட்சுமி

தனலட்சுமி தான் ஒரு சாதாரண பெண் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்தார். அதன் பிறகே அவர் படங்களில் நடித்தது தெரிய வந்தது. மேலும் தனலட்சுமி மீது சிலர் மோசடி புகார் தெரிவித்து வீடியோ வெளியிட்டார்கள். இந்நிலையில் ஏம்மா தனலட்சுமி, நீ சாதாரண ஆளா, நம்பிட்டோம் என பிக் பாஸ் பார்வையாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக வீடியோ ஒன்றையும் உருவாக்கியுள்ளனர்.

அழுகை

கடந்த இரண்டு நாட்களாக முதல் ப்ரொமோ மட்டும் தான் சாதாரணமாக இருக்கிறது. அடுத்த இரண்டு ப்ரொமோ வீடியோக்களில் ஹவுஸ்மேட்ஸ் அழுது கொண்டே இருந்தார்கள். தயவு செய்து இன்றும் ஹவுஸ்மேட்ஸை அழ வைத்து வீடியோ வெளியிடாதீர்கள் பிக் பாஸ் என பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!