நல்லாவே கொளுத்திப் போட்ட ஷிவின் – அசீமிடம் மல்லுக்குப் பாய்ந்த தனா!

பிக் பாஸ் 6 வீட்டில் இருக்கும் அசீமும், தனலட்சுமியும் மோதிக் கொண்ட ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

சக போட்டியாளரான அசீம் மீது தனலட்சுமி கோபப்பட்டு பேசிய ப்ரொமோ வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.

பிக் பாஸ் 6 வீட்டில் அவ்வப்போது சண்டை வரவில்லை என்றால் சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடுகிறது என்று நினைக்கிறார்கள் போன்று. இந்நிலையில் தான் சண்டை ஸ்பெஷலிஸ்ட்டுகளான அசீமையும், தனலட்சுமியையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார் பிக் பாஸ். அது தொடர்பான ப்ரொமோ வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

ஷிவின்

சண்டை போட்டபொழுது நாங்கள் எல்லாம் தனா உள்ளே போ என்று சொன்னோம் அல்லவா. அதுவும், ஜனனி உள்ளே போனு சொன்னதும், இரண்டும் ஒன்னு என்கிறார்கள் என்று ஷிவின் கூறியதுடன் ப்ரொமோ வீடியோ துவங்கியிருக்கிறது. ஷிவின் கூறியதை கேட்டதும் தனலட்சுமி நேராக அசீமிடம் சென்று வாக்குவாதத்தை ஆரம்பித்தார்.

தனலட்சுமி

ஜனனி உள்ளே போனதற்கு நீங்கள் என்னிடம் என்ன சொன்னீங்க. அவள் உள்ளே போகணும் என்று நினைத்தேன். அதனால் இரண்டு பேரையும் ஹோல்டு பண்ணி நான் உள்ளே போக வைத்தேன் என்று தானே சொன்னீங்க என தனலட்சுமி கேட்டார். அப்படி நான் சொல்லவே இல்லையே என்று பதில் அளித்தார் அசீம்.

அசீம்

ஜனனி வந்து உங்களுக்கு கை கொடுத்து அழுதுவிட்டு போகும் முன்பு நீங்க சொல்லவே இல்லையா என தனலட்சுமி கேட்க அதை கண்டுகொள்ளாமல் ஷிவின் ஏன் தேவையில்லாமல் என் பெயரை இழுக்கிறார் என தெரியவில்லை மாம்ஸ் என்றார் அசீம்.

கோபம்

அசீம் தன்னை மதிக்காததை பார்த்த தனலட்சுமியோ, இனியும் இந்த மனுஷனிடம் பேசி பலனில்லை என வெளியே எல்லாமே பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்று கூறிவிட்டு இடத்தை காலி செய்தார். ஆனால் அசீமை பலருக்கும் பிடித்திருப்பதே அவர் இப்படி ஏதாவது ஏடாகூடம் செய்வதால் தான் என்பது தனலட்சுமிக்கு தெரியாமல் போய்விட்டதே என்கிறார்கள் பார்வையாளர்கள்.

சகுனி

ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, நிம்மதியாக பப்பாளி கூட சாப்பிட விட மாட்டேங்குதே இந்த புள்ள என்பதே அசீமின் மைண்ட் வாய்ஸ். தனலட்சுமி எதையும் நேரடியாக கேட்பது நல்ல விஷயம். ஷிவின் சகுனி வேலையை துவங்கிவிட்டு வேடிக்கை பார்க்கிறார். கொளுத்திப் போட்டு அசீமையும், தனலட்சுமியையும் மோதவிட்டுவிட்டார் ஷிவின் என தெரிவித்துள்ளனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!