குமரி மாணவர் வழக்கில் திடீர் திருப்பம்… மாணவி கிரீஷ்மா அந்தர் பல்டி!

குமரி கல்லூரி மாணவர் ஷாரோன்ராஜ் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக போலீஸ் மிரட்டியதால் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டேன் என்று காதலி நீதிமன்றத்தில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் கல்லூரி மாணவர் ஷாரோன்ராஜ் கொலை வழக்கில் அவரது காதலியும், கல்லூரி மாணவியுமான கிரீஷ்மாவை திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ெகாலைக்கு உடந்தையாக இருந்த கிரீஷ்மாவின் தாய் சிந்து, சாட்சியை அளித்ததாக தாய்மாமா நிர்மல்குமார் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் கிரீஷ்மா, அவரது தாய் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில் கல்லூரி மாணவி கிரீஷ்மா நெய்யாற்றின்கரை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வாக்குமூலம் கொடுத்து இருந்தார். அந்த வாக்குமூலம் தற்போது வெளியே கசிந்து உள்ளது.

வாக்குமூலத்தில் மாணவி கிரீஷ்மா, ‘ஷாரோன்ராஜை நான் கொலை செய்யவில்லை. கொலை செய்ததாக ஒப்புக்கொள்ளவில்லை என்றால், எனது பெற்றோர், உறவினர்களை வழக்கில் சேர்த்து கைது செய்து விடுவதாக குற்றப்பிரிவு போலீசார் மிரட்டினர்.

அதனால் தான் நான் ஒப்புக்கொண்டேன்’ என்று நீதிமன்றத்தில் மாணவி கிரீஷ்மா திடீர் பல்டி அடித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: dinakaran * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!