இதெல்லாம் ஒரு புரமோவா..? கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த சீசனின் சிறந்த புரமோ என விளாசி வருகின்றனர்.


பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 7 வாரங்கள் கடந்து விட்டன. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை நடன இயக்குநர் சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி , நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி என 7 போட்டியாளர்கள் வெளியேற்றப் பட்டுள்ளனர். ஜிபி முத்து பர்சனல் காரணங்களால் பிக்பாஸ் வீட்டில் இருந்து தானாகவே வெளியேறிவிட்டார்.

டபுள் எவிக்ஷன்

இந்நிலையில் வரும் வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெறும் என அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன். இதனால் வௌவௌத்து போயுள்ளனர் ஹவுஸ்மேட்ஸ். இந்நிலையில் இன்று இந்த வாரத்திற்கான நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது முதல் புரமோவில் தெரியவந்தது. கடந்த வாரம் இரண்டு வாரங்களாக ஓபன் நாமினேஷன் நடைபெற்ற நிலையில் இன்று கன்ஃபெஷன் ரூமில் ரகசிய நாமினேஷன் நடைபெறுகிறது.

என்னத்தை கிழிச்சிட்டீங்க

இதனை தொடர்ந்து ஹவுஸ் மேட்ஸ் பலரும் ஆயிஷா, ராம் மற்றும் அசீம்மின் பெயர்களையே கூறுவது இன்றைய இரண்டாவது புரமோவில் தெரியவந்தது. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் தனலெட்சுமி, மைனா மற்றும் ஜனனி ஆகியோர் அமுதவாணன் முன்பு பாட்டுப்பாடி நடனமாடுகின்றனர். நாங்கள் பிக்பாஸ் செலிபிரிட்டி என கூறிக்கொள்ளும் அவர்களிடம் என்னத்தை கிழிச்சிட்டீங்க என கேட்கிறார் அமுதவாணன்.

சிறந்த புரமோ

இதனைக் கேட்டு அவர்கள் இருவரும் அமுதவாணை குமுறுகின்றனர். இந்த புரமோவில் சொல்லும் அளவுக்கு ஒன்றுமே இல்லை. இதனை பார்த்த நெட்டிசன்கள் இதெல்லாம் ஒரு புரமோவா என கேட்டு விளாசி வருகின்றனர். இதற்கு புரமோவே போடாமலே இருந்திருக்கலாம் என்றும் சிலர் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் இந்த சீசனின் சிறந்த புரமோ இது என சர்காஸமாக பதிவிட்டு வருகின்றனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!