முகப்பரு பிரச்சனைக்கு இயற்கை முறையில் நிரந்தர தீர்வு..!

எந்த வகையினால் முகப்பரு ஏற்பட்டிருந்தாலும் எளிமையான முறையில் அதை எப்படி நீக்குவது என்பதுபற்றி இங்கே பார்க்கலாம்.

– திருநீற்றுப்பச்சிலையை அரைத்து முகப்பரு உள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வந்தால் எளிதில் குணம் கிடைக்கும். திரிபலா பொடி கசாயத்தால் முகம் கழுவிவந்தாலும் பருக்கள் நீங்கும்.

– குங்குமாதி லேபத்தைப் பருக்களின்மீது தடவி வர, பருக்கள் மறைவதோடு தழும்புகளும் விரைவில் நீங்கும்.

– பசுஞ்சாணத்தில் செய்யப்பட்ட விபூதியை தண்ணீரில் குழைத்துத் தேய்த்துவந்தாலும் பருக்கள் மறையும்.

– 50 மில்லி நல்லெண்ணெயுடன் மிளகை ஊற வைக்க வேண்டும். 20 நாள்கள் கழித்துப் பயன்படுத்த வேண்டும். இதை முகப்பரு உள்ள இடங்களில் தடவி வர பருக்கள் நீங்கும்.

  • அரிசி மாவில் செய்யப்பட்ட நாமக்கட்டியை உரசி தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலும் இது நீங்கும்.
  • – வெங்காரத்தைப் பொரித்தால் (போரக்ஸ்) அது மாவாகக் கரையும். அதைத் தண்ணீருடன் கலந்து பரு பழுத்திருக்கும் இடங்களில் தடவி வந்தால் விரைவில் பழுத்து உடையும்.
  • – வெள்ளரிப் பிஞ்சை தக்காளி ஜூஸில் ஊற வைத்துத் தொடர்ந்து முகம் கழுவி வர விரைவில் பரு மறையும். அத்துடன் மீண்டும் முகப்பரு வருவதைக் கட்டுப்படுத்தும்.
  • – மலச்சிக்கல் இருந்தாலும் முகப்பரு ஏற்படும். வெட்பாலை தைலத்தைப் பயன்படுத்தி வர மலச்சிக்கல் நீங்குவதோடு, முகப்பருவும் மறையும்.
  • பொடுகால் ஏற்படும் முகப்பருவுக்குப் பொடுதலை இலைச்சாற்றைத் தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வர பொடுகு நீங்குவதோடு, முகப்பருக்கள் சீக்கிரம் மறையும்.
  • – எலுமிச்சைப்பழச் சாறு, ரோஜாவால் தயாரிக்கப்பட்ட பன்னீர் இரண்டையும் சம அளவு எடுத்துக் கலந்து முகத்தில் பூசி, அரை மணி நேரம் ஊறவைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் மூன்று நாள்கள் இவ்வாறு செய்துவந்தால், முகப்பரு மறைந்துவிடும். எக்காரணம்கொண்டும் எலுமிச்சைப்பழச் சாற்றைத் தனியாக முகத்தில் தேய்க்கக் கூடாது. இதில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்தைப் பாதிக்கும். பன்னீர் வாங்கும்போது, அதன் தரத்தைப் பரிசோதித்து வாங்கிப் பயன்படுத்துவது அவசியம்.
  • – வேப்பிலை சிறந்த கிருமி நாசினி. கொழுந்து வேப்பிலையைத் தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ, முகப்பருக்கள் நீங்கும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!