பிக் பாஸில் இருந்து ராபர்ட் மாஸ்டர் நேரா போய் யாரை பார்த்திருக்காங்கனு பாருங்க!

பிக் பாஸ் 6 வீட்டில் இருந்து வெளியேறிய கையோடு அசல் கோலாரை சந்தித்து பேசியிருக்கிறார் ராபர்ட் மாஸ்டர். அதை பார்த்த அவரின் ஆதரவாளர்களோ, இவர் வேண்டாம் மாஸ்டர், வேண்டவே வேண்டாம் என்கிறார்கள்.

பிக் பாஸ் 6 வீட்டில் இருந்து கிளம்பிய கையோடு நிவாஷினி தான் அசலை சந்தித்து பேசுவார் என்று பார்த்தால் ராபர்ட் மாஸ்டர் சந்தித்திருக்கிறார்.

ராபர்ட்

பிக் பாஸ் 6 வீட்டில் இருக்கும் திருமணமான ரச்சிதா மகாலட்சுமி மீது ராபர்ட் மாஸ்டருக்கு காதல். நேரம் கிடைக்கும்போது எல்லாம் தன் ஃபீலிங்கை ரச்சிதாவிடம் வெளிப்படுத்தினார். ஆனால் அவரின் ஃபீலிங்ஸை ரச்சிதா ஏற்கவில்லை. அப்படியும் அவரை விடவில்லை ராபர்ட். இந்நிலையில் தான் இனியும் ராபர்ட் மாஸ்டரை தங்கவிட்டால் நிகழ்ச்சியின் பெயர் கெட்டுவிடும் என்று பேக் செய்து வெளியேற்றிவிட்டார்கள்.

அசல்

பிக் பாஸ் 6 வீட்டில் இருந்து வெளியே வந்த ராபர்ட் மாஸ்டர் நேராக அசல் கோலாரை போய் சந்தித்து பேசியிருக்கிறார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் அசல். அதை பார்த்த பிக் பாஸ் பார்வையாளர்கள் கூறியிருப்பதாவது, இரண்டு கோளாரும் ஒன்று சேர்ந்துவிட்டது. இனி இவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்றார்கள்.

ரச்சிதா

நிவாஷினி தான் அசலை சந்திப்பார் என்று பார்த்தால் ராபர்ட் மாஸ்டர் சந்தித்திருக்கிறாரே. இது என்ன கணக்கு என்று புரியவில்லை என்கிறார்கள் பிக் பாஸ் பார்வையாளர்கள். அசல் வேண்டாம் மாஸ்டர், அவர் மட்டும் வேண்டவே வேண்டாம். மைனா நந்தினியும், ரச்சிதா மகாலட்சுமியும் விஷம் என்பதை தற்போதாவது புரிந்து கொண்டீர்களா மாஸ்டர் என ராபர்ட்டின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வனிதா

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ராபர்ட் மாஸ்டருக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்ததே அவரின் முன்னாள் காதலியான வனிதா விஜயகுமார் தான். நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் உன் பெயரை சொல்வேன் என வனிதாவிடம் கூறியிருக்கிறார். ஆனால் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது வனிதாவுக்கு கிரெடிட்டே கொடுக்கவில்லை. இதை வனிதாவும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மேலும் தான் வாய்ப்பு வாங்கிக் கொடுத்த விஷயத்தையும் யாரிடமும் கூறவில்லை.

உண்மை

வனிதா தான் மாஸ்டருக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார் என்கிற தகவல் கசிந்து பலரும் ராபர்ட்டை திட்ட ஆரம்பித்தார்கள். அதன் பிறகே, தான் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது உண்மை தான் என்றார் வனிதா. முன்னாள் காதலராக இருந்தாலும் அவருக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு வாங்கிக் கொடுக்க நல்ல மனசு வேண்டும். வனிதா அக்காவுக்கு ரொம்ப நல்ல மனசு என ரசிகர்கள் தெரிவித்தனர். ராபர்ட் மாஸ்டருக்கு சம்பளம் கூட நல்ல தொகையாக அமையும் வகையில் பேசியிருக்கிறார் வனிதா என்பது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!