இப்படியும் ஒரு ஆசிரியரா..? மாணவனை மகனாக தத்தெடுத்த ஆசிரியர்..!


அமெரிக்காவின் Louisianaவிலுள்ள Baton Rougeஇன் பள்ளி ஒன்றில் தற்காலிக ஆசிரியப் பணியில் சேர்ந்தார் 24 வயது Chelsea Haley.

அங்கு வழக்கமான ஆசிரியப் பணியுடன் அவருக்கு வித்தியாசமான ஒரு பணியும் வழங்கப்பட்டது.

பள்ளியில் யாருக்கும் அடங்காத, பெரும்பாலும் தண்டிக்கப்படுகிற Jerome Robinson என்னும் மாணவனை மற்ற ஆசிரியர்கள் அடிக்கடி அவரிடம் அனுப்பி வைப்பார்கள்.

ஏனென்றால் அவன் அவர் சொல்வதை மட்டும்தான் கொஞ்சமாவது கேட்பான்.

ஆனால் ஒரு காலகட்டத்தில் அவராலும் அவனை சமாளிக்க முடியவில்லை.

Jerome Robinson மிக மோசமாக நடந்து கொண்டான். சில நேரங்களில் வேலையை விட்டு ஓடி விடலாமா என்றுகூட Chelsea நினைத்தார்.

நாட்கள் செல்லச் செல்ல ஆசிரியைக்கும் மாணவனுக்கும் இடையே இனம்புரியாத ஒரு பாசப்பிணைப்பு உருவானது.

வர வர கீழ்ப்படிதலுள்ள ஒரு மாணவனாகவும் நன்கு படிக்கிறவனாகவும் மாறிவிட்டான் Jerome.

Chelseaவுக்கு பாராட்டு மின்னஞ்சல்கள் குவியத்தொடங்கின.

இதற்கிடையில் Chelseaவின் தற்காலிகப் பணி முடியும் நேரம் வந்தது.

ஆசிரியை மற்றும் மாணவனுக்கிடையேயான பாசப்பிணைப்பை நன்கு அறிந்த பள்ளியின் முதல்வர், அவ்வப்போது வந்து Jeromeஐப் பார்த்துச் செல்லுமாறு Chelseaவைக் கேட்டுக்கொண்டார்.

ஆனால் Chelseaவின் மனதில் வேறொரு பெரிய திட்டம் இருந்தது. ஆம், அவர் Jeromeஐ தனது மகனாகத் தத்தெடுக்க முடிவு செய்தார்.


மறு நாள் Jeromeஐ சந்தித்து தனது முடிவைக் கூறும்படி அவனிடம் சென்றார் Chelsea.

Chelseaவைப் பார்த்ததும் Jerome கேட்ட கேள்வியில் அதிர்ச்சியில் உறைந்துபோனார் அவர். அவன் கேட்டான், “நான் உங்களுடனேயே வந்து விடட்டுமா?”அவர் கண் கலங்க ”நானும் உன்னிடம் இதைக் கேட்பதற்காத்தான் வந்தேன்” என்றார்.

மறு நாள் Jerome வீட்டிற்குச் சென்ற Chelsea, அவனது தாயாரிடம் தான் வேறு வேலைக்காக ஜார்ஜியாவுக்கு செல்லவிருப்பதாகக் கூறினார்.

அதற்கு Jeromeஇன் தாய் சொன்ன பதில் Chelseaவை மேலும் அதிர வைத்தது. அவர் கூறினார், “ நீங்கள் போங்கள், ஆனால் Jeromeஐயும் அவன் தம்பி Jaceஐயும் உங்களுடன் அழைத்துச் சென்று விடுங்கள்” என்று.

அரசாங்கத்திடம் முறையாக அனுமதி பெற்று அவர்கள் இருவரையும் தன் பிள்ளைகளாக தத்தெடுத்துக் கொண்டார்.

அவர்கள் மூவரும் இப்போது ஜார்ஜியாவில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

இந்த மகிழ்ச்சிக்கு உலகில் எதுவும் ஈடாகாது என்கிறார் Chelsea. Jerome இப்போது நன்றாகப் படிக்கிறான். பெரும்பாலான பாடங்களில் நூறு மதிப்பெண்களும், சிலவற்றில் 90களும் எடுக்கிறான்.

அவன் இப்பொதெல்லாம் பள்ளியில் தண்டனை பெறுவதில்லை.

அவன் ஒரு நாள் கல்லூரி ஸ்காலர்ஷிப் பெற தகுதி பெறுவான் என்று நான் நம்புகிறேன் என்று கூறுன் அவன் தாய் Chelsea, தனது இளைய மகனைப் பற்றியும் Facebookஇல் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

“Jace எனது அறைக்குள் வந்தான், என் நெற்றியில் முத்தமிட்டான், அம்மா, நீங்கள்தான் Bestest அம்மா என்றான், என் செல்லப்பையன் வளர்ந்தால் எத்தனை பெண்கள் அவன் பின்னால் சுற்றப் போகிறார்களோ”.-Source: news.lankasri

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!