ஆப்பிள் ஐபோனை ஹாக் செய்தவருக்கு Twitter நிறுவனத்தில் வேலை!

உலகிலேயே முதல் முதலாக ஆப்பிள் ஐபோனை ஹாக் செய்த ஹேக்கர் ஒருவருக்கு ட்விட்டர் நிறுவனத்தில் வேலை வழங்கியுள்ளார் எலன் மஸ்க். அவர் எலன் மஸ்கின் தீவிர எதிர்ப்பாளர் என்பது கூடுதல் தகவல்.


யார் ஒருவர் எலன் மஸ்க்கை வெறுத்தாரோ அவரையே வேலைக்கு சேர்த்து அனைவரையும் ஆச்சர்யமடையவைத்துள்ளார் எலன் மஸ்க்.


Hotz பொறுத்தவரை எலன் ‘மஸ்கின் இவ்வாறான நடவடிக்கை மிகப்பெரிய விஷயங்களை உருவாக்கும்’ என்று கூறுகிறார்.
ஆப்பிள் ஐபோன்களை ஹாக் செய்து அந்த நிறுவனத்துடன் தொடர்ந்து மோதலில் இருக்கும் Hotz தானியங்கி டிரைவிங் கருவிகளை உருவாக்கி பழைய கார்களில் பொருத்தும் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார்.


George Hotz என்பவர் உலகில் முதன் முறையாக ஐபோனை ஹேக் செய்த நபர் ஆவார். எங்களின் போன்களை யாராலும் ஹேக் செய்யமுடியாது என்று கூறி பெருமைபட்டுக்கொண்டு வந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை ஹேக் செய்து அவர்களை வாயடைக்க வைத்தவர்.

மேலும் எலன் மஸ்க் மீது தீவிர வெறுப்பு கொண்ட அவர் டெஸ்லா நிறுவனத்தில் இருந்து வேளைக்கு அழைப்பு வந்ததை கூட தூக்கி எறிந்துவிட்டு சொந்தமாக நிறுவனத்தை தொடங்கினார்.

அவர் தொடங்கிய நிறுவனம் பழைய கார்களை முழு ஆட்டோமேட்டிக் டிரைவிங் வசதிகொண்ட கார்களாக மாற்றும் ஒரு நிறுவனம் ஆகும். தற்போது ட்விட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் சர்வாதிகாரி போல நடத்துவதால் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த ஊழியர்கள் பலர் வேலையே விட்டு ராஜினாமா செய்கிறார்.

இதனால் ட்விட்டர் நிறுவனம் விரைவில் மூடப்படும் என்று செய்திகள் பரவலாக பரவிவருகின்றன. அதுவும் இனி வரும் மாதங்களில் உலகக்கோப்பை கால்பந்து தொடர், கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பல உலக நிகழ்வுகள் நடக்கவுள்ளன.

அப்போது பலர் ட்விட்டர் பயன்படுத்தும்போது அதன் சர்வெர்கள் தாங்குமா? என்பது கூட தெரியாது. இதனால் வேளைக்கு ஆள் இல்லாமல் அவர் யாராவது கோடிங் தெரிந்தால் கூட வேளைக்கு சேரலாம் என்ற அளவிற்கு இறங்கிவிட்டார்.

தற்போது யார் ஒருவர் எலன் மஸ்க்கை வெறுத்தாரோ அவரையே வேளைக்கு சேர்த்து அனைவரையும் ஆச்சர்யமடையவைத்துள்ளார் எலன் மஸ்க். இதை தனது ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார். அந்த ட்வீட் ‘Hotz கூட ட்விட்டரில் மஸ்க்கிற்கு கீழ் இன்டெர்ன் வேளைக்கு சேர ஒப்புக்கொண்டுவிட்டார். மஸ்க் அதை ஏற்றுக்கொண்டுவிட்டார். நிச்சயமாக நாம் பேசலாம்’ என்று பதிவிட்டுள்ளார்.

Hotz இந்த இன்டெர்ன்ஷிப் வேலையில் சேர முக்கிய காரணம் எலன் மஸ்க் ‘ட்விட்டரில் ஊழியர்கள் வெறித்தனமாக அதிக நேரம் வேலை செய்யவேண்டும் என்றும் அதற்கு சம்மதம் இல்லாதவர்கள் இப்போதே வேலையே விட்டு சென்றுவிடலாம்’ என்று கூறினார்.

இதன் காரணமாக பலர் வேலையே ராஜினாமா செய்துவிட்டு சென்றுவிட்டனர். Hotz பொறுத்தவரை எலன் ‘மஸ்கின் இவ்வாறான நடவடிக்கை மிகப்பெரிய விஷயங்களை உருவாக்கும்’ என்றும் இதன் காரணமாகவே இன்டெர்ன்ஷிப் வேளைக்கு சேர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் ஐபோன்களை ஹாக் செய்து அந்த நிறுவனத்துடன் தொடர்ந்து மோதலில் இருக்கும் Hotz தானியங்கி டிரைவிங் கருவிகளை உருவாக்கி பழைய கார்களில் பொருத்தும் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார்.

இவரின் இந்த தானியங்கி டிரைவிங் கார் பற்றி அப்போது டெஸ்லா நிறுவனம் ‘இவ்வாறு எந்த ஒரு அனுபவமும் இல்லாத சிறிய நிறுவனங்கள் தயாரிக்கும் ஆட்டோ டிரைவிங் கார்களை கூட நாம் உற்பத்தி செய்யலாம்’ என்று கூறியது.

மேலும் hotz அவர்களை டெஸ்லாவில் வேளைக்கு சேரவும் அழைப்பு விடுத்தது. ஆனால் இதனை அவர் நிராகரித்துவிட்டார். இதற்கு காரணமாக அவர் எலன் மஸ்க் அடிக்கடி ஒப்பந்தத்தை மாற்றி அமைத்தாகவும் இதனால் அந்த வேலையே நிராகரித்ததாகவும் கூறினார்.

நிராகரிப்பு கடிதத்தில் “உங்களின் வேளைக்கு நன்றி ஆனால் நான் இப்பொது எந்த வேலையும் தேடவில்லை Mobileye நிறுவனத்தை நொறுக்கியவுடன் உங்களுக்கு நான் தகவல் அனுப்புகிறேன்” என்று தெரிவித்தார்.

அந்த சமயம் டெஸ்லா நிறுவனத்தின் Autopilot டெக்னாலஜி Mobileye எனும் நிறுவனம் வழங்கிவந்தது. தற்போது அவரே ட்விட்டர் பணியில் சேர்ந்துள்ளது ஆச்சர்யப்படவைத்துள்ளது. எலன் மஸ்க் ட்விட்டரில் வேலை செய்ய மென்பொறியாளர்களை தேடி வரும் நிலையில் Hotz தனக்கு சான் பிரான்சிஸ்கோ நகரில் வாழ தேவையான பணம் கிடைத்தால் போதும் என்று கூறுகிறார்.

எதிர்பார்த்ததை விட ட்விட்டர் Search வசதி அதிக தகவல்கள் கொண்டுள்ளதாக HOTZ ட்வீட் செய்துள்ளார். Google Search வசதியை விட ட்விட்டர் Search பயன்படுத்தலாமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!