எல்லோரும் அவரை டார்கெட் பண்றாங்க… கமலும் அப்படிதான்… வனிதா பகீர்!

பிக்பாஸ் வீட்டில் மொத்த பேரும் அந்த ஒரு போட்டியாளரைதான் டார்கெட் செய்கிறார்கள் என கூறியுள்ளார் வனிதா விஜயகுமார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பிரபலங்கள் பலரும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் விமர்சனம் செய்து வருகிறது. அந்த வகையில் வனிதா விஜயகுமாரும் கடந்த சில சீசன்களாகவே சமூக வலைதள பக்கத்தில் ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் விமர்சனம் செய்து வருகிறார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா விஜயகுமார் அந்த நிகழ்ச்சிக்கு பிறகுதான் யூட்யூப் சேனலில் விமர்சிக்க தொடங்கினார்.

ஒருவர் மட்டுமே டார்கெட்

சமீபத்தில் ராஜ வம்சமும் அருங்காட்சியகமும் டாஸ்க்கில் கூட ராபர்ட்டையும் ரச்சிதாவையும் ராஜா ராணியாக போட்டு டாஸ்க்கை நடத்தியதற்கும் கடும் கண்டனம் தெரிவித்தார் வனிதா. இந்நிலையில் வனிதாவின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் பிக்பாஸ் வீட்டில் அனைத்து ஹவுஸ்மேட்டுகளும் அசீமையே டார்கெட் செய்வதாக தெரிவித்துள்ளார்.

கமலை சாடிய வனிதா

அதோடு நடிகர் கமல்ஹாசனையும் சாடியுள்ளார் வனிதா. அசீமை ஸ்ட்ராங்கான போட்டியாளர் என்று ஹவுஸ்மேட்ஸ் கணித்து விட்டார்கள். அதனால் அவர் வீட்டுக்குள் இருக்கக்கூடாது என்று நினைக்கும் ஹவுஸ்மேட்ஸ் அவரை பற்றி என்னல்லாம் கிரியேட் பண்ண முடியுமோ பண்ணுகிறார்கள். அவரைப் பற்றி பேட் இமேஜ் கிரியேட் செய்கிறார்கள். கமல் சாரும் கரெக்ட்டா செய்கிறார். வீக்கெண்ட் ஆனால் கமல்ஹாசன் அசீமை விடுவதில்லை.

மிஸ் யூஸ் பண்றாங்க

அதை ஹவுஸ்மேட்ஸ் முழுக்க மிஸ் யூஸ் செய்கிறார்கள். ஒருத்தரை டார்கெட் செய்துவிட்டால், ஒருத்தரை ஸ்ட்ராங் போட்டியாளர் என்று நினைத்து விட்டால் அவரை வெளியேறும் வரை என்னவெல்லாம் செய்ய முடியுமோ செய்துவிடுகிறார்கள் என கூறியுள்ளார் நடிகை வனிதா விஜயகுமார். வனிதா விஜயகுமார் அசீம் குறித்து பேசியுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அசீம் மீது கடுப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சின்னத்திரை நடிகரான அசீம் ஆரம்பம் முதலே வாரம்தோறும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறார். சக பெண் போட்டியாளர்களை போடி வாடி என்று பேசுவதும் ஆண் போட்டியாளர்களை போடா வாடா என்று பேசுவதுமாக உள்ளார். இதனால் சக ஹவுஸ்மேட்ஸ் அசீம் மீது கடுப்பில் உள்ளனர். அதோடு என்ன டாஸ்க் கொடுத்தாலும் அதிலும் பிரச்சனையை ஏற்படுத்தி மல்லுக்கட்டி வருகிறார் அசீம்.

பயில்வான் குற்றச்சாட்டு

அசீம் பிக்பாஸ் வீட்டில் நடந்து கொள்ளும் விதம் சக ஹவுஸ்மேட்டுகளையும் எரிச்சலாக்கி வருகிறது. இதனால் வாரம் தோறும் எவிக்ஷனுக்கான நாமினேஷனில் இடம்பிடித்து விடுகிறார் அசீம். சமூக வலைதளங்களிலும் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். இந்நிலையில் அசீம்முக்கு ஆதரவாக பேசியுள்ளார் வனிதா விஜயகுமார். ஏற்கனவே பயில்வான் ரங்கநாதன், கமல்ஹாசன் விக்ரமனை எதுவும் கேட்பதில்லை, அவரை பார்த்து மிரளுகிறார் என கூறியிருந்தார். இந்நிலையில் வனிதாவும் கமல்ஹாசன் அசீமை மட்டுமே டார்கெட் செய்வதாக தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!