கேஸ் கொடுத்த ஜனனி…. நீதிபதி மணி எப்படித் தான் தீர்ப்பு சொல்லப் போறாரோ!

பிக் பாஸ் 6 வீட்டை நீதிமன்றமாக மாற்றிய நிலையில் இன்று மணிகண்டன் தான் நீதிபதி. மிகவும் கடினமான வழக்கிற்கு தீர்ப்பு சொல்ல வேண்டிய இடத்தில் இருக்கிறார்.

மணிகண்டன் நீதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் நிலையில் அவரை தேடி மிகவும் கடினமான வழக்கு ஒன்று வந்திருக்கிறது.

நீதிமன்றம்

பிக் பாஸ் வீட்டை இந்த வாரம் நீதிமன்றமாக மாற்றிவிட்டார்கள். இதுவரை பிக் பாஸ் வீட்டில் நடந்த பிரச்சனைகளை வழக்காக மாற்றி வாதாடுகிறார்கள். வழக்குகள் மாறுவது போன்று தினமும் ஒரு நீதிபதி வருகிறார். முதலில் ஏ.டி.கே., அடுத்ததாக ராம், இன்று மணிகண்டன். அவர் நீதிபதியான நேரமோ என்னமோ ரொம்ப ரொம்ப கஷ்டமான வழக்கு வந்திருக்கிறது. எப்படித் தான் தீர்ப்பு சொல்லப் போகிறாரோ?

ஜனனி

ஜனனி சார்பில் அசீம் வழக்கறிஞராக ஆஜராகியிருக்கிறார். விக்ரமன் சார்பில் குவின்ஸி ஆஜராகியிருக்கிறார். உங்கள் தமிழில் பிரச்சனை போன்று என விக்ரமன் அவர்கள் ஜனனி அவர்களை சுட்டிக்காட்டியது மிகுந்த மனவேதனையை அளித்தது என்றார் அசீம். அதை கேட்டு பயங்கர வேதனையில் இருப்பது போன்று முகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார் ஜனனி.

குவின்ஸி

அசீம் சொன்னதை கேட்டதும் விக்ரமனும், அவரின் வழக்கறிஞர் குவின்ஸியும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மொழி என்று சொன்னேன் என விக்ரமன் கூறினார். உங்கள் மொழியில் சிரமம் உள்ளதா என்றே கூறியிருக்கிறார் என குவின்ஸியும் தெரிவித்தார். இதையடுத்து சாட்சி கூண்டில் வந்து நின்றார் விக்ரமன்.

விக்ரமன்

கூண்டில் நின்று விக்ரமன் கூறியதாவது, அவங்க தமிழில் எனக்கு பிரச்சனையே கிடையாது. அந்த செந்தமிழ் பேசுவது எனக்குமே தடுமாற்றம் தான் என்றார். இதையடுத்து சாட்சி கூண்டுக்கு வந்த ஜனனியோ, அவங்க தமிழில் என்று கூறியது வருத்தத்திற்குள்ளானதே என்றார்.

அதை கேட்ட குவின்ஸியோ, உங்கள் தமிழ் என்று கூற முடியாது. ஏனென்றால் அங்கு டாஸ்க்கை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என்றார். உடனே அசீமோ, அவங்க தமிழ் பேசும்போது தூங்கிட்டாங்கனு நினைக்கிறேன் என கிண்டலாக கூறினார்.

கோபம்

எத்தனை முறை கத்தி சொன்னாலும் அது டாஸ்க் டாஸ்க் டாஸ்க் டாஸ்க் தான் என்று நீதிபதியிடம் தெரிவித்தார் வழக்கறிஞர் குவின்ஸி. அதை பார்த்த பார்வையாளர்களோ, சிட்டிக்கு கோபம் வருது வசி என கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அசீம்

இந்த அசீம் நேற்று ராமை அதுவும் நீதிபதியாக இருந்தவரை அசிங்கப்படுத்தினார். இன்று குவின்ஸியை அசிங்கப்படுத்தியிருக்கிறார். இதை கமல் ஹாசன் என்னவென்று கேட்டு கண்டிக்க வேண்டும். மணிகண்டன் நீதிபதியான நேரம் இப்படி ஒரு கஷ்டமான வழக்கா?. எத்தனையோ பிரச்சனை இருக்க, இந்த சப்பை மேட்டரை போய் வாதாடுகிறார்களே என பார்வையாளர்கள் கலாய்க்கிறார்கள்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!