நடிகையை விவாகரத்து செய்யும் வாரிசு பட நடிகர் ஸ்ரீகாந்த்..?

தானும், சிவரஞ்சனியும் விவாகரத்து பெறப் போவதாக வெளியான தகவல் குறித்து நடிகர் ஸ்ரீகாந்த் விளக்கம் அளித்திருக்கிறார்.

நடிகர் ஸ்ரீகாந்தும், நடிகை சிவரஞ்சனியும் விவாகரத்து பெறப் போவதாக வெளியான தகவல் குறித்த உண்மை தெரிய வந்திருக்கிறது.

தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் ஸ்ரீகாந்த். அவர் நடிகை சிவரஞ்சனியை கடந்த 1997ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ரோஷன், ரோஹன் என்கிற மகன்களும், மேதா என்கிற மகளும் இருக்கிறார்கள். ஹைதரபாத்தில் இருக்கும் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் ஸ்ரீகாந்த். இந்நிலையில் ஸ்ரீகாந்துக்கும், சிவரஞ்சனிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து பெறப் போகிறார்கள் என்கிற தகவல் வெளியாகி தீயாக பரவியது.

விவாகரத்து

விவாகரத்து தகவல் குறித்து அறிந்த ஸ்ரீகாந்த் விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, இது போன்ற வதந்திகளை யார் பரப்புவது?. முன்னதாக நான் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பி என் குடும்பத்தாரை வேதனை அடைய செய்தார்கள். தற்போது பண பிரச்சனைகளால் நானும், மனைவியும் விவாகரத்து பெறுவதாக வதந்தி பரப்பியிருக்கிறார்கள் என்றார்.

கவலை

ஸ்ரீகாந்த் மேலும் கூறியதாவது, விவாகரத்து செய்தியால் என் மனைவி கவலை அடைந்திருக்கிறார். செல்போனில் வந்த ஃபார்வர்ட் மெசேஜை என்னிடம் காண்பித்து வருத்தப்பட்டார். இதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அவருக்கு ஆறுதல் கூறினேன். எங்களின் நண்பர்களும், நலம் விரும்பிகளும் போன் செய்து விசாரிப்பதால் தான் இந்த விளக்கம் அளிக்கிறேன் என்றார்.

நடவடிக்கை

ஸ்ரீகாந்தை பற்றி வதந்தி பரவுவது இது முதல் முறை அல்ல. இந்நிலையில் தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என ஸ்ரீகாந்த் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். ஸ்ரீகாந்தை மணந்த பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் ஸ்ரீரஞ்சனி. அவர் கமல் ஹாசனின் கலைஞன், விஜயகாந்தின் ராஜதுரை, பிரபுவின் சின்ன மாப்ளே உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரிசு

ஸ்ரீகாந்த், சிவரஞ்சனியின் மூத்த மகன் ரோஷன் தன் தந்தை வழியில் நடிக்க வந்துவிட்டார். கவுரி ரோனங்கி இயக்கிய Pelli SandaD படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் ரோஷன். ஸ்ரீகாந்தோ வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அகண்டா படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு வில்லனாக நடித்து ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றார் ஸ்ரீகாந்த். மேலும் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமாரின் ஜேம்ஸ் படத்திலும் நடித்திருந்தார். வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் வாரிசு படத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினேகா

திரையுலகை சேர்ந்தவர்களை பற்றி வதந்தி பரவுவது வழக்கமாகிவிட்டது. சினேகாவும், அவரின் காதல் கணவரான பிரசன்னாவும் விவாகரத்து பெறப் போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வதந்தி பரவியது. தான் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சினேகா. இந்நிலையில் ஸ்ரீகாந்த், சிவரஞ்சனி பற்றி வதந்தி பரவியிருக்கிறது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!