தனலட்சுமியும், மணிகண்டனும் மாறி மாறி கத்தும் ப்ரொமோ வீடியோ.!

பிக் பாஸ் 6 வீட்டில் இருக்கும் மணிகண்டன் மற்றும் தனலட்சுமி இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது.

தனலட்சுமியும், மணிகண்டனும் மாறி மாறி கத்தும் ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

பிக் பாஸ் 6

டாஸ்கின்போது தனலட்சமி கீழே விழுந்துவிட்டார். மணிகண்டன் தான் என்னை பிடித்து தள்ளினார் என்று கூறி தனலட்சுமி கத்தினார். பதிலுக்கு மணிகண்டனும் கத்தும் ப்ரொமோ வீடியோ வெளியாகியிருக்கிறது.

தனலட்சுமி மட்டும் டாஸ்கின்போது மற்றவர்களை கீழே தள்ளிவிடலாம். தன்னை யாராவது தெரியாமல் தள்ளிவிட்டால் கூட கத்தி கூச்சலிட்டு டிராமா போடுகிறார். இவரை பார்த்தால் பாவமாக இல்லை என்கிறார்கள் பார்வையாளர்கள்.

மணிகண்டன் தனலட்சுமியை வேண்டும் என்றே தள்ளிவிடவில்லை. ஆனால் அதற்காக அவர் வருத்தப்படாதது தான் அவரின் மோசமான கேரக்டரை காட்டுகிறது. மணிகண்டனுக்கு நேரம் சரியில்லை என்று பிக் பாஸ் பார்வையாளர்கள் தெரிவித்துள்னர்.

இந்த தனலட்சுமி ஏன் சும்மா, சும்மா கத்திக் கொண்டே இருக்கிறார். பொது மக்கள் சார்பில் கலந்து கொண்டு நம் பெயரை கெடுத்துக் கொண்டிருக்கிறார். தனலட்சுமியை பத்திவிடுங்க பிக் பாஸ் என்கிறார்கள் பார்வையாளர்கள்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!