தனலட்சுமியை ரவுண்டு கட்டிய போட்டியாளர்கள்

பிக் பாஸ் 6 வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தனலட்சுமியை ரவுண்டு கட்டிய ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இன்று வெளியாகியிருக்கும் இரண்டு ப்ரொமோ வீடியோக்களிலும் தனலட்சுமியை தான் காட்டியிருக்கிறார்கள்.

தனலட்சுமி

தனலட்சுமி எந்த குணங்களை மாற்றிக் கொண்டால் மேம்பட முடியும் என்று ஹவுஸ்மேட்ஸிடம் பிக் பாஸ் கேட்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதை கேட்ட ஷெரினாவோ, யாராலும் தனலட்சுமியை திடீரென்று ட்ரிக்கர் பண்ண முடியும் என்றார்.

பொறுமை

நீ கொஞ்சம் யோசி என்றார் ராபர்ட் மாஸ்டர். நீ அப்ப ஒன்னு பேசுவ தெரியுமா, அது ரொம்ப ஹர்டிங்கா இருந்துச்சு என்று குவின்ஸி கூறினார். நீ சாரி கேட்டு நான் பார்த்தது இல்லை என்றார் அமுதவாணன். உனக்கு பொறுமை வந்தால் வேற லெவலில் இருக்கும்னு ரச்சிதா கூறினார்.

மாற்றம்

இங்கு நான் செய்வது தான் சரி. நான் பேசுவது மட்டும் தான் சரி என்கிற போக்கை தனலட்சுமி மாற்றினால் நல்லது. எதற்கெடுத்தாலும் முகத்தை சுளிப்பதையும், சக போட்டியாளர்களை முறைப்பதையும் கூட நிறுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

தைரியம்

தனலட்சுமிக்கு தைரியம் பிளஸ் பாயிண்ட். ஆனால் வாயி கொஞ்சம் ஓவராக இருக்கிறது. பேச்சை குறைத்தால் நல்லது. தனலட்சுமிக்கு பொறுமை என்பதே இல்லை. இதை எல்லாம் மாற்றினால் தனலட்சுமி ஃபைனல் வரை வரும் வாய்ப்பு உள்ளது என்று பிக் பாஸ் பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!