முகச்சுருக்கமெல்லாம் ஒரே நாளில் காணாமல் போக முட்டையை இப்படி தடவுங்க..!


தூசுக்கள், மாசு, எண்ணெய் உணவுகள் போன்ற பல காரணங்களால் பருக்கள் உண்டாகின்றன. அவ்வப்போது தோன்றி மறைந்துவிடுகின்றன. அதைக் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டால், சரும ஆரோக்கியம் வெறும் க்ரீம்களில் மட்டுமே இருக்கிறது என்று கருதினால் அது முற்றிலும் தவறு.

நம்முடைய சருமம் ஆரோக்கியமாக இருக்க ஊட்டச்சத்துமிக்க உணவும் சருமத்துக்குத் தேவையான வைட்டமின்களும் மிக அவசியம். அவை பற்றாக்குறையினால் சரும செல்கள் வறட்சியடைகின்றன.

சருமத்தில் உள்ள செல்கள் வறட்சியடைவதாலேயே முகத்தில் சுருக்கங்கள் உண்டாகின்றன. இதற்காக எத்தனை கிரீம்களைப் பயன்படுத்தினாலும் கிரீம்கள் மாறிக் கொண்டிருக்கின்றனவே ஒழிய பிரச்னை ஓய்ந்தபாடில்லை.

ஆனால் வீட்டிலேயே எளிய வழியில் இந்த முகச்சுருக்கத்தை வெறும் ஐந்தே நிமிடங்களில் போக்கிக் கொள்ள முடியும்.


முட்டையின் வெள்ளைக்கருவையும் எலுமிச்சையையும் கொண்டே முகச்சுருக்கங்களை உடனடியாக விரட்டிவிட முடியும்.

முட்டையில் உள்ள புரதச்சத்து சரும செல்களின் ஆரோக்கியத்தைக் காக்கிறது. அதேபோன்று எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி ஆன்டி- ஆக்சிடண்ட்டாகப் பயன்படுகிறது. மேலும் அதில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது.

ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் எலுமிச்சை ஜூஸை ஒன்றாகக் கலந்து நன்கு நுரைபொங்க அடித்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை முகம், கை,கால் ஆகியவற்றில் தடவி 15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். இக்கலவை நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

முகத்தைக் கழுவிய பின், வழக்கம்போல ஏதேனும் மாய்ச்சரைஸரை முகத்தில் தடவிக் கொள்ளலாம்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!