20 வயது பெண்ணை திருமணம் செய்த 70 வயது முதியவர்!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 70 வயது முதியவர். விவசாயி. ஏழ்மையான குடும்பத்தில் மூத்தவராக பிறந்த இவர் தன்னுடன் பிறந்த சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைக்க பணத்தை சேமித்து வைத்து திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக இளம் வயதில் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் 70 வயதான முதியவர் ஆதரவு இன்றி தனியாக வசித்து வந்தார். வயதான காலத்தில் தன்னை கவனித்துக் கொள்ள ஒரு துணை வேண்டும் என எண்ணி அவரது உறவினர்கள், நண்பர்களிடம் தெரிவித்தார்.

முதியவரின் நேர்மை மற்றும் நன்னடத்தையை அறிந்த பக்கத்து கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது 20 வயது மகளை 70 வயது முதியவருக்கு திருமணம் செய்து கொடுக்க சம்மதம் தெரிவித்தார்.

இந்த திருமணத்திற்கு அவரது மகளும் விருப்பம் தெரிவித்ததால் கல்யாண ஏற்பாடுகள் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கிராமத்தில் உள்ள கோவிலில் வைத்து இளம்பெண்ணின் கழுத்தில் முதியவர் தாலி கட்டினார்.

இந்த திருமணத்தில் முதியவரின் உறவினர்கள், நண்பர்கள், சுற்றத்தார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இவர்களின் திருமண வீடியோவை செல்போனில் பதிவு செய்த சிலர் சமூக வலைதளங்கள் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதால் வைரலாக பரவி வருகிறது. இந்த திருமணத்திற்கு சிலர் வாழ்த்துக்களும், ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!