வி.ஜே. மகேஸ்வரியிடம் அசல் செய்த சில்மிஷம்!

பிக் பாஸ் 6 வீட்டில் இருக்கும் குவின்ஸியை அடுத்து வி.ஜே. மகேஸ்வரியிடமும் தன் வேலையை காட்டிவிட்டார் அசல் கோலார்.


பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் அசல் கோலார் செய்யும் வேலை தான் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. குவின்ஸி செல்லும் இடமெல்லாம் செல்கிறார்.

இந்நிலையில் குவின்ஸி விக்ரமனிடம் பேசியபோது அவரின் கையை அசல் தடவியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

அந்த வீடியோ வெளியாகி வைரலானது. அசல் கோலாரை தடவல் மன்னன் என்று கூறி மீம்ஸ் போட்டாலும் சமூக வலைதளவாசிகள் விளாசினார்கள்.

அசல் கோலார் மீது நடவடிக்கை எடுக்குமாறு பிக் பாஸிடம் தெரிவித்தார்கள். இந்நிலையில் அசலின் மேலும் ஒரு வீடியோ வெளியாகி வலம் வந்து கொண்டிருக்கிறது.

வி.ஜே. மகேஸ்வரி கிழிந்த மாடல் ஜீன்ஸ் போட்டு அமர்ந்திருந்தார். அந்த கிழிசல் வழியாக அவரின் முழங்கால் தெரிந்தது. அதை போய் தடவினார் அசல்.

வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

அசல் கையை வைத்ததும் ஓங்கி ஒரு அறை விடாமல் இந்த மகேஸ்வரி சிரித்துவிட்டாரே. இந்த அசலின் லீலைக்கு ஒரு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

உங்களை தான் நம்பியிருக்கிறோம் ஆண்டவரே. வார இறுதி நாட்களில் வந்து அசலை ஒரு வழி செய்துவிட்டு போங்க. பெண் போட்டியாளர்கள் பக்கமே அசல் போகக் கூடாது என்று சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!