பிக் பாஸ் 6 வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேறப் போகும் நபர் யார்..?

பிக் பாஸ் 6 வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேறப் போகும் நபர் பற்றி சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9ம் தேதி துவங்கியது. பிக் பாஸ் வீட்டிற்குள் முதல் ஆளாக நுழைந்து பார்வையாளர்களை கவர்ந்துவிட்டார் ஜி.பி. முத்து.

அவர் என்ன செய்கிறார் என்பதை தெரிந்துகொள்ளவே பலர் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கிறார்கள். இந்நிலையில் முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகும் நபர் யார் என்பது குறித்து பேச்சு கிளம்பியிருக்கிறது.

தனலட்சுமி தான் முதலில் வெளியேற்றப்படுவார் என்கிறார்கள் பிக் பாஸ் பார்வையாளர்கள். தனலட்சுமியை பார்த்தாலே எரிச்சலாக இருக்கிறது. தயவு செய்து அவரை வெளியேற்றிவிட்டு மறுவேலை பாருங்கள் பிக் பாஸ் என்று பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அப்படியே அந்த அமுதவாணன் மற்றும் விக்ரமனையும் சேர்த்து அனுப்பிடுங்க பிக் பாஸ். உங்களுக்கு புண்ணியமாக போயிடும் என்று மேலும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

நாம் யார் பெயரை சொன்னாலும் அவர்கள் முடிவு செய்திருக்கும் ஆளை தான் வெளியேற்றுவார்கள். அந்த நபர் யார் என்பதை வார இறுதி நாளில் பார்க்கலாம்.

இதற்கிடையே இந்த வார இறுதி நாட்களில் ஆண்டவர் என்ன பேசப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது என்று கமல் ஹாசன் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!