பிரபல மாடலுடனான காதலை உறுதி செய்த வாரிசு நடிகர் – தீயாய் பரவும் புகைப்படம்.!

மாடலும் நடிகையுமான தாரிணி காளிங்கராயருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து காதலை உறுதி செய்துள்ளார் நடிகர் காளிதாஸ் ஜெயராம்.

பிரபல நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். இவரும் மலையாள திரையுலகில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் பிரபல நடிகராக திகழ்கிறார். தனது ஏழு வயதில் மலையாள திரைப்படமான கொச்சு கொச்சு சந்தோஷங்கள் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசியதிரைப்பட விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு மீன் குழம்பும் மண் பானையும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் நாயகனாக அறிமுகமானார். சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் படத்தில் கமலின் மகனாக நடித்திருந்தார். அண்மையில் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


இந்நிலையில் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இதுக்கும் காளிதாஸ் ஜெயராம், மாடலும் நடிகையுமான தாரிணி காளிங்கராயருடன் தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்து காதலுக்கான ஹிண்டையும் கொடுத்துள்ளார். துபாயின் சொகுசு படகு ஒன்றில் தாரிணியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இதற்கு கேப்ஷனாக ஹார்ட்டின் கொடுத்துள்ளார். இதன்மூலம் காளிதாஸ் காதல் திருமணத்துக்கு தயாராகிவிட்டதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். காளிதாஸ் பகிர்ந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின் போதும் குடும்ப புகைப்படத்தில் தாரிணி இடம்பெற்றிருந்தார். அப்போதே இவர்கள் காதலிப்பதாக கிசுகிசு கிளம்பியது.

கடந்த 2019 ஆம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார் தாரணி காளிங்கராயர். தற்போது மாடலிங் செய்து வரும் இவர், சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இவர் மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவில் 3ம் இடம்பிடித்தவர். இந்நிலையில் இவரும், காளிதாஸும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!