ஹெல்மெட் அணியாமல் பைக் ரைடு.. பப்ளிசிட்டி தேடுறாரா புகழ்..?

குக் வித் கோமாளி புகழ் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வீடியோ வெளியிட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே யூடூயூபர் டிடிஎஃப் வாசன் தனது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து என்பவரை பின் இருக்கையில் அமர வைத்து கொண்டு ஆசுரவேகத்தில் தனது இருசக்கர வாகனத்தை இயக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அப்போது, அவர் 200 கிலோமீட்டருக்கும் மேற்பட்ட வேகத்தில் இருசக்கர வாகனத்தை இயக்கியுள்ளார்.அதோடு மட்டுமல்லாமல் பின் இருக்கையில் அமர வைத்து இருந்த ஜி பி முத்துவிற்கு ஹெல்மெட் அணிவிக்காமல் அதிவேகத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றார்.

இருசக்கர வாகனம் அதிவேகத்தில் வருவதைக் கண்ட வாகன ஓட்டிகள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மையத்திற்கு இது பற்றி தகவல் தெரிவித்தனர்.

இது பற்றி கோவை மாவட்டத்தில் போத்தனூர் மற்றும் சூலூர் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போத்தனூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு சம்பந்தமாக டிடிஎஃப் வாசன் மதுக்கரை நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றார்.

இந்நிலையில் சூலூர் காவல் நிலையத்தில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக வாகனத்தை ஓட்டுதல் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவருக்கு ஹெல்மெட் அணிவிக்காமல் வாகனத்தை ஓட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இது சம்பந்தமாக சூலூர் போலீசார் கேரள மாநிலம் குட்டம் பகுதியில் டிடிஎஃப் வாசன் இருப்பதை அறிந்து அங்கு கைது செய்ய சென்றனர். அப்போது போலீசார் வந்திருப்பதை அறிந்த டிடிஎஃப் வாசன் அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவானார்.

அவரை தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை சூலூர் போலீசார் சூலூர் அருகே தென்னம்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அவ்வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது வாகனத்தை ஓட்டி வந்தது டிடிஎஃப் வாசன் என தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்த சூலூர் போலீசார் வாகனத்துடன் சூலூர் காவல் நிலையம் உள்ளனர். டிடிஎஃப் வாசன் இரு நபர் உத்தரவாத பத்திரம் கொடுத்ததன் பேரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமான ‘குக் வித் கோமாளி’ புகழ் நடுரோட்டில் ஹெல்மெட் அணியாமல் யமாஹா பைக்கை ஓட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். இது தற்போது சர்ச்சையாகியுள்ளது. வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்லாம் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட புகழ் தானும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி மீசையை முறுக்கிக்கொண்டு கெத்தாக வீடியோ வெளியிட்டிருப்பது தவறான உதாரணம் என்று சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர். மேலும், பிரபலங்கள் சிலர் இப்படி வேண்டுமென்றே தங்களை பரபரப்பாக பேசவேண்டும் என்று வீடியோ வெளியிடுவதும், பின்னர் சாரி கேட்டு வீடியோ போடுவதும் பேஷன் ஆகிவிட்டது என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!