காதலியுடன் டேட்டிங் போகணும் ரூ.300 கொடுங்க – இன்ப அதிர்ச்சி கொடுத்த அமித் மிஸ்ரா

இந்தியாவில் முக்கிய லெக் ஸ்பின்னர்களில் ஒருவராக இருந்தவர் அமித் மிஸ்ரா. இந்திய அணிக்காகவும் ஐபிஎல் தொடர்களில் பல ஆண்டுகள் இவர் விளையாடி வந்துள்ளார்.

டுவிட்டரில் தற்போது ஆக்டிவாக இருந்து வரும் வீரர்களில் ஒருவரான அமித் மிஸ்ரா, செய்த செயல் தான் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா போட்டியில் டைவ் அடித்து அசத்தலான கேட்ச் பிடித்த வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் அமித் மிஸ்ரா பகிர்ந்திருந்தார்.

அந்த பதிவிற்கு பல்வேறு ரசிகர்களும் தங்களது கமெண்டின் மூலம் பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.அந்த பதிவின் கமெண்டில் வித்த்தியசமாக ஒரு நபர் தனது காதலியுடன் டேட்டிங் செல்ல ரூ.300 தேவைப்படுவதாகவும், கொடுத்து உதவுமாறும் கேட்டிருந்தார். இதையடுத்து மற்றொரு நபர் பணம் கேட்ட அந்த நபரிடம் உங்களது யுபிஐ விவரங்களை பகிர்மாறு ரிப்ளை செய்திருந்தார்.

அந்த நபர் தனது கூகுள்பே எண்ணை பகிரவே, அந்த எண்ணுக்கு ரூ.500 அனுப்பி வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் அமித் மிஸ்ரா. பணம் அனுப்பிய ஸ்கீரின்ஷாட்டை தனிப்பதிவாக பகிர்ந்த அமித் மிஸ்ரா, ‘டேட்டிங் சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த நபர் ,அமித் மிஸ்ராவுக்கு நன்றி தெரிவித்தார்.அமித் மிஸ்ராவின் இந்த செயல் தான் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!