உலகின் கவனத்தை ஈர்த்த கிம் ஜாங்கின் மகள்..? – வெளியான ரகசியம்!

மர்ம தேசம் என அறியப்படும் வட கொரியாவில், முதல் முறையாக அந்நாட்டு அதிபரின் மகள் வெளியுலகத்தின் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருப்பது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.

மிகவும் கட்டுப்பாடுகள் நிறைந்த நாடான வட கொரியாவில் அதிபரின் மனைவி, குழந்தைகள் குறித்த தகவல் கூட இன்னும் முழுமையாக வெளியுலகத்திற்கு தெரிவிக்கப்பட்டதில்லை.

இந்நிலையில் தான், அந்நாட்டின் தேசிய தினத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் கிம் ஜாங் உன்னின் மகள் பங்கேற்றதாக வெளியாகியுள்ள தகவல் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விழாவில் சக பள்ளி மாணவிகளுடன் ஆடிய குறிப்பிட்ட ஒரு குழந்தை மீதே அனைவரது கவனமும் இருந்ததே இந்த யூகத்திற்கு காராணமாகியுள்ளது.

இதோடு, மகளின் நடனத்தை பார்த்து பார்த்து பூரித்த தந்தையான அதிபர் கிம் ஜாங் உன், நிகழ்ச்சி முடியும் வரை தனது மனைவியுடன் கைத்தட்டிவாறு ரசித்தார்.

தனது கெடுபிடியான ஆட்சியால் உலகை அதிர வைத்து வரும் வட கொரிய அதிபரை ஒரு தந்தையாக காட்சிப்படுத்தியுள்ள இந்த வீடியோ தற்போது உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!