கள்ளக்காதலில் மோதல்… பெண் ஏட்டுக்கு நடந்த பயங்கரம்!

முக்கோண கள்ளக்காதல் தகராறில், பெண் ஏட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, மற்றொரு மகளிர் ஏட்டும், அவருக்கு துணையாக இருந்தவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. துமகூரு மாவட்டம், ஹிலியூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றியவர் ஏட்டு சுதா, 39. திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மூன்று மாதங்களுக்கு முன், இவரது கணவர் இறந்து விட்டார்.இதே நிலையத்தில் மற்றொரு ஏட்டாக பணியாற்றி வருபவர் ராணி, 33. இவருக்கும் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. சுதா, ராணி இருவரும் பெங்களூரில் ஒரு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளனர்.

இது தொடர்பாக, இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். சில நேரங்களில், போலீஸ் நிலையத்திலேயே சண்டை போட்டு கொள்வது உண்டு.இந்நிலையில், ஏட்டு சுதா, செப்டம்பர் 13ம் தேதி கொலை செய்யப்பட்டார். அன்று மாலையே, சுதாவின் உறவினர் மஞ்சுநாத், 28 என்பவரும் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன், அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், ஹிலியூர் போலீஸ் நிலைய ஏட்டு ராணி, தன் நண்பர் நிகில், 30 பெயர்களை குறிப்பிட்டிருந்தார்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், பெங்களூரு ஏட்டை காதலிப்பது தொடர்பாக, ராணிக்கும், சுதாவுக்கும் தகராறு இருந்து வந்தது.

இதனால் கோபத்தில் இருந்த ராணி, சுதாவை கொல்ல திட்டமிட்டார்.இதற்காக, சுதாவின் உறவினர் மஞ்சுநாத்திடம் பேசி, 5 லட்சம் ரூபாய் தருவதாக பேரம் பேசி முடித்தார்.

செப்டம்பர் 5ம் தேதி சுதாவை கொல்ல மஞ்சுநாத்தும், அவரது நண்பர் நிகிலும் திட்டமிட்டனர். ஆனால் சூழ்நிலை சரியில்லாததால் முடியவில்லை.முதல் முயற்சி தோல்வி அடைந்ததால், ராணி அவர்களை திட்டி, ‘ஒரு வாரத்தில் சுதாவை கொல்ல வேண்டும்’ என மிரட்டிஉள்ளார்.செப்டம்பர் 13ம் தேதி மாலை பணி முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த சுதாவை, காரில் விடுவதாக கூறி, நிகில் அழைத்து சென்றார்.

செல்லும் வழியில், மஞ்சுநாத்தும் ஏறிக் கொண்டார்.சிறிது துாரத்தில், சுதாவின் கண்ணில் மிளகாய் பொடி, ‘ஸ்பிரே’ அடித்து, அவரது மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

அவரது உடலை திப்டூர் – அரிசிகரே ரயில் தண்டவாளம் அருகில் புதரில் வீசிவிட்டு சென்றனர். சுதாவை கொன்றதால் பயத்தில் இருந்த மஞ்சுநாத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ஏட்டு ராணி, நிகிலை போலீசார் கைது செய்தனர். ராணியுடன் தொடர்பில் இருந்த ஏட்டு யார் என்பது குறித்து, விசாரணை நடக்கிறது.-News & image Credit: dinamalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!