லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மகளுக்காக ரசிகர்கள் பிரார்த்தனை!

வலியிலும் அழகாக சிரிக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் மகளுக்காக பிரார்த்தனை செய்வதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகையும், இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் மகளுக்காக பிரார்த்தனை செய்வதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
அமேசான் கிரேட் இந்தியன் திருவிழாவில் வீடு மற்றும் சமையலறை கிக்ஸ்டார்ட்டர் சலுகைகள்- ரூ.99/- தொடக்கம்
லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

தன் வீட்டில் நிலைமை சரியில்லை என்று நடிகையும், இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சமூக வலைதளத்தில் முன்பு தெரிவித்தார். இந்நிலையில் தன் செல்ல மகளான ஸ்ரீயாவுக்கு உடல்நலம் சரியில்லை என்பதை விவரித்திருக்கிறார்.

சிரிப்பு

உடல்நலம் பாதிக்கப்பட்டபோதிலும் ஸ்ரீயா அழகாக சிரித்து தனக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு, மகளின் வலிமையை நினைத்து பெருமைப்பட்டிருக்கிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

பிரச்சனை

கொரோனா பாதிப்புக்கு பிறகு ஸ்ரீயாவுக்கு கருப்பையில் நீர்க்கட்டி இருப்பது தெரிய வந்தது. மருத்துவர்களின் அறிவுரைப்படி லேப்ரோஸ்கோபி மூலம் அகற்றப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சை மூலம் வேறு சில பிரச்சனைகள் ஏற்பட்டுவிட்டது. 6 மாதமாகியும் இன்னும் சரியாகவில்லை. ஆனால் விரைவில் அவள் சரியாகிவிடுவாள் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

அறுவை சிகிச்சை

தன் மகள் மிக அழகாக பாடும் வீடியோவை வெளியிட்டு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கூறியிருப்பதாவது, கடந்த 6 மாத அனுபவத்தை பகிர்வேன். நிறைய பாடங்கள் கற்றுக் கொண்டோம். பலரின் அறிவுரையை கேட்கும் முன்பு அறுவை சிகிச்சை செய்யக் கூடாது என்பதை தெரிந்து கொண்டோம். அறுவை சிகிச்சைக்கு செல்லும் முன்பு சிடி அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்யுங்கள். யுஎஸ்ஜி மட்டும் போதாது. ஸ்ரோயாவுக்கு அழகிய குரல் என தெரிவித்துள்ளார்.

பிரார்த்தனை

லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ட்வீட்டுகளை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது, கவலைப்படாதீங்க மேடம். ஸ்ரீயாவுக்கு விரைவில் எல்லாம் சரியாகிவிடும். நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். கடவுளை விட சிறந்த மருத்துவர் இல்லை. உங்கள் மகள் விரைவில் குணமடைவார் என தெரிவித்துள்ளனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!