பாரதிராஜா குடும்பத்தினரால் கைவிடப்பட்டாரா ? மருத்துவ செலவை ஏற்ற முக்கியப்புள்ளி!

இயக்குநர் பாரதிராஜாவின் மொத்த மருத்துவ செலவையும் முக்கியத் தலைவர் ஏற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். வயிற்று வலி மற்றும் அஜீரணக் கோளாறால் பாதிக்கப்பட்ட அவர் சென்னை தி நகரில் உள்ள பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தனியார் மருத்துவமனை

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் உடல்நிலை சீராகததால் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சயளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை தேறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2 வாரங்கள்
2-
இந்நிலையில் பாரதிராஜா 2 வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவ செலவு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது இதனால் அவரது மருத்துவ செலவை ஏற்க குடும்பத்தினர் யாரும் முன்வரவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

மருத்துவ செலவு

இதனை அறிந்த புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், பாரதிராஜாவின் மொத்த மருத்துவச் செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் பாரதிராஜாவின் குடும்பத்தினர் ஏன் மருத்துவ செலவை ஏற்க முன்வரவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முன்னேற்றம்

தற்போது பாரதிராஜாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இன்னும் ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுத்துவிட்டு வீடு திரும்புவார் என தெரிகிறது. ஆனாலும் அவர் உடனடியாக சினிமாவில் நடிக்க முடியாது என்றும் குறைந்தது ஒரு மாதமாவது ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!