திருச்சி மாணவி வழக்கில் திருப்பம்… வாயில் விஷத்தை ஊற்றி கொன்றார்களா..?

திருச்சி கல்லூரி மாணவி இறப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி மாணவியின் பெற்றோர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கல்லூரி மாணவி வாயில் விஷம் ஊற்றி கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரியும் சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கை மாற்ற கோரியும் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மாணவியின் பெற்றோர் மனு அளித்தனர்.

திருவரம்பூர் நொச்சி வயல் புதூர் பகுதியில் வசித்து வரும் ஆனந்தன் அவரது மனைவி சாந்தி இவர்களின் மகள் வித்யா லட்சுமி (19). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த மே 13 அன்று உடல்நிலை சரியில்லாததால் மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மாணவியிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றபோது, மூன்று பேர் என்னிடம் தகராறு ஈடுபட்டு குளிர்பானத்தில் விஷத்தை கலந்து எனது வாயில் ஊற்றிவிட்டனர் என தெரிவித்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில், மே 23 அன்று மாணவி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இந்நிலையில், மாணவியின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து சில கோரிக்கைகளை வைத்தனர். அதில், தனது மகளின் இறப்புக்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனக் கூறி பிரேதத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது ஆட்சியராக இருந்த சிவராசு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். இதனால் பிரேதத்தை பெற்று அடக்கம் செய்தோம்.

ஆனால், தற்போது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகள் யார் என்று தெரிந்தும் கைது செய்யாமல் உள்ளனர் எனவே திருவரம்பூர் சரக டிஎஸ்பி, காவல் ஆய்வாளர்கள் விசாரணை மேற்கொண்டால் நியாயம் நீதி கிடைக்காது என்பதால் எனது மகளின் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். என அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக மாணவியின் இறப்பு வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி கூறியதாக வெளியான தகவல் வேறு மாதிரியாக இருந்தது. அதாவது, மாணவிக்கு வாலிபருடன் காதல் ஏற்பட்டு பின்னர் உண்டான சண்டையினால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாகவும் மாணவியின் உடலில் எலி மருந்து சாப்பிட்டதான அறிகுறிகள் இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்த விசாரணை தற்போது எந்த அளவில் இருக்கிறது என்பது தெரியவில்லை.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!