மகனின் சடலத்தை பார்த்து உயிரை விட்ட தாய்!

சிங்கப்பெருமாள் கோவில் அருகே உயிரிழந்த 11 ஆம் வகுப்பு மாணவனின் உடலை பார்த்து கதறி அழுத தாய் மாரடைப்பால் மரணம்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த ஜே.ஜே நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா மற்றும் சாந்தி தம்பதியர். இவர்களுக்கு ஜெய்கணேஷ் என்கிற 15 வயது மகன்.

இவர் சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். ஜெய்கணேஷ் கடந்த சில வருடங்களாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு உள்ளதாக பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது.


இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் ஜெய்கணேஷ் வீட்டிற்கு அருகே வீதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார்.

அருகில் இருந்த பொதுமக்கள் ஜெய்கணேசை தூக்கிக்கொண்டு சிங்கபெருமாள்கோவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று இருந்த நிலையில் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த மறைமலைநகர் போலீசார் உடலை கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று மாலை சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை கொண்ட உறவினர்கள் இறுதி சடங்கிற்காக அவர்களது இல்லத்திற்கு எடுத்து சென்றனர்.

மகன் இறந்த துக்கத்தில் இருந்த ஜெய்கணேஷ் தாய் சாந்தி மகனின் உடலை பார்த்து கதறி அழுத நிலையில் திடீரென மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். மகன் இறந்த துக்கத்தில் இருந்த தாயும் உயிரிழந்தது,உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!