கானா நாட்டின் எப்புடுவுடன் கலாசார உறவு – நித்யானந்தா சொல்கிறார்!

கைலாசா இதுவரை எங்கு அமைந்துள்ளது என்பது அதிகாரப்பூர்வமாக தெரியாத நிலையில், தற்போது எப்புடுவுடன் கலாச்சார உறவிற்கான புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளது பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார்.

பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி தலைமறைவானார். ஆனால் நித்யானந்தா, கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக இணையதளத்தில் தோன்றி அறிவித்தார். அவரது பக்தர்களுக்கு அடிக்கடி இணையதளத்தில் தோன்றி உரையாற்றியும் வருகிறார்.

இந்த நிலையில் நித்யானந்தா இறந்துவிட்டதாக இணையதளங்களில் செய்தி பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்து நித்யானந்தா தரப்பில் இருந்து சில முகநூல் (பேஸ்புக்) பதிவுகள் வெளியாகி வருகின்றன. அவர் தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஆழ்ந்த சமாதி நிலையில் இருந்து விரைவில் உடலில் குடியேறி சத்சங்க உரையாற்றுவேன் என கூறி இருந்தார்.

இந்த நிலையில், தற்போது மத்திய ஆப்பிரிக்க நாடான கானாவில் உள்ள எப்புடு என்ற மாவட்டத்துடன் கைலாசா இரு நாட்டு உறவை மேம்படுத்துவதற்கான தொடக்க நிலையில் இருப்பதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, கைலாசா தன்னுடைய அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

பழமையான கலாச்சாரம், இந்துக்களுக்கான முதல்நாடான கைலாசா புரிதல், மத சுதந்திரம் மற்றும் மற்ற உரிமைகள், இளைஞர்களுக்கான தலைமை, கல்வி, கல்வி உரிமை பரிமாற்றம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட உறவுகளின் கீழ் கானாவில் உள்ள எப்புடு மாவட்டத்துடன் தொடக்க உறவில் இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

கைலாசா இதுவரை எங்கு அமைந்துள்ளது என்பது அதிகாரப்பூர்வமாக தெரியாத நிலையில், தற்போது எப்புடுவுடன் கலாச்சார உறவிற்கான புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளதால் விரைவில் கைலாசா எங்குள்ளது என்று தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய ஆப்பிரிக்க நாடான கானாவில் ஏராளமான பழங்குடிகள் வசித்து வருகின்றனர்.

கைலாசாவில் இருந்த அவ்வப்போது இதுபோன்ற தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால், இதுவரை கைலாசா எங்கு அமைந்துள்ளது என்று அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியானது இல்லை. ஆனால், கைலாசாவிற்கு என்று பாஸ்போர்ட், கைலாசாவிற்கு என்று நாணயம் என்று பலவற்றை அடுத்தடுத்து வெளியிட்டு நித்யானந்தா அவரது சீடர்களை குஷிப்படுத்தினார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!