உலக திருநங்கை ராணி… போட்டியில் பங்கேற்கும் பிக்பாஸ் பிரபலம்!

நமீதா மாரிமுத்து திருநங்கைகளில் பிரபலமானவர். சென்னையை சேர்ந்த இவரது தந்தை மாரிமுத்து, தாயார் வெண்ணிலா பெற்றோருக்கு ஒரே மகளான இவரை எந்த பேதமும் இல்லாமல் வளர்த்து வருவதாக பெருமையுடன் கூறுகிறார்.

மாடலிங், சினிமாவில் பின்னணி குரல் கொடுப்பது போன்ற பல வேலைகளில் முத்திரை பதித்து வரும் இவர் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். நமீதா மாரிமுத்து 32 வயதாகும் நமீதா திருநங்கைகளுக்கு உதவும் அமைப்பையும் நடத்தி வருகிறார். ஏற்கனவே மிஸ் சென்னை, மிஸ் இந்தியா, பட்டங்களை வாங்கி இருக்கும் நமீதா இப்போது உலக திருநங்கை ராணி பட்டத்துக்காக முயற்சித்து வருகிறார்.

வருகிற 25-ம் தேதி தாய்லாந்தில் நடைப்பெற உள்ள உலக திருநங்கை அழகி போட்டியில் இவர் பங்கேற்கிறார். இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் ஒரே போட்டியாளர் நமீதா. பல்வேறு சர்வதேச போட்டிகளுக்கு அரசு உதவுவது போல் திருநங்கைகளுக்கான இந்த போட்டியிலும் அரசு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நமீதா மாரிமுத்து 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், மீண்டும் 7ஆண்டுகளுக்கு பிறகு பாங்காங்கில் சிகிச்சை எடுத்துக் கொண்டதாக கூறும் நமீதா பாலின மாற்று அறுவை சிகிச்சையில் நம் நாட்டு மருத்துவர்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு தேவை என்கிறார்.

எல்லா இடங்களிலும், எல்லா நிலைகளிலும் திருநங்கைகளுக்கும் சமூகத்தில் சமநீதி வேண்டும் அதற்காக பாடுபடுவதே என் நோக்கம் என்றார் நமீதா மாரிமுத்து.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!