மைத்திரியால் 28 ஆண்டுகளின் பின் யாழில் ஏற்பட்ட பாரிய மாற்றம்..!


28 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த காங்கேசன்துறை முதல் பருத்தித்துறை வரையான ஏபீ21 வீதி இன்று முதல் மக்களுக்காக திறந்து வைக்கப்படுகிறது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட போரும், அதன் பின்னர் பாதுகாப்பு பிரச்சினையில் இருந்த இந்த வீதி தற்பொழுது 28ஆண்டுகளின் பின்னர் திறக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

தேர்தல் பிரசாரத்திற்காக அங்கு சென்றுள்ள ஜனாதிபதி இந்தக் கருத்தினை வெளியிட்டிருக்கிறார்.


யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டிருந்த பருத்துறை- பொன்னாலை வீதி 28 வருடங்களின் பின்னர் இன்று திறந்துவைக்கப்பட்டிருக்கின்றது.

1990ம் ஆண்டு வலிகாமம் வடக்கு பகுதி படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதன் பின்னர் இந்த வீதி நிரந்தரமாக மக்கள் பாவனைக்கு தடைசெய்யப்பட்ட வீதியா க காணப்பட்டது.

இந்நிலையில் அண்மையில் மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்ட பின்னர் பருத்துறை- பொன்னாலை வீதியை திறக்குமாறு மக்கள் கேட்டு வந்திருந்தனர்.

இதற்கமைய இன்றைய தினம் மேற்படி வீதி மக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவைக்கப்பட்டிருக்கின்ற து. இந்த வீதி திறந்து வைக்கப்பட்டதன் ஊடாக சுமார் 50 கிலோ மீற்றர் தூரம் சுற்றி வரவேண்டிய தேவை அற்றுப்போயிருக்கின்றது.-Source: tamilwin

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!