சேட்டை செய்த வாலிபர்.. சட்டையை பிடித்து இழுத்த ஒரங்குட்டான்!

மிருக காட்சி சாலையில் சேட்டை செய்த வாலிபரின் சட்டையை பிடித்து இழுத்த ஒரங்குட்டான் வீடியோ வைஅர்லாகி உள்ளது. ரியா இந்தோனேசியவை சேர்ந்தவர் ஹசன் அரிஃபின்( வயது 19) .

இவர் ஜூன் 6 ஆம் தேதி இந்தோனேசியாவின் ரியாவில் உள்ள கசாங் குலிம் மிருகக்காட்சிசாலைக்கு சென்று உள்ளார். விலங்குகளை பார்வையிட்டு வந்த ஹசன் ஒரங்குட்டான் இருக்கும் கூண்டை பார்வயாளர்கள் தடுப்பை தாண்டி மேலே ஏறி உள்ளார்.

டினா என்ற ஒரங்குட்டான் குரங்குடன் அவர் விளையாடி உள்ளார். குரங்கு அவரது சட்டையை வசமாக பிடித்து கொண்டது . அவர் விடுபட முயற்சித்ததும் அவரது காலை பிடித்து கொண்டது. குரங்கு அவரது காலை பிடித்து இழுக்க ஆரம்பித்தது ஹசனும் போராடி உள்ளார்.

அவருடன் வேறு ஒரு நபரும் அவரை காப்பாற்ற போராடி உள்ளார். பிறகு ஹசன் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என உதவிக்கு கத்த ஆரம்பித்தார். காலை பிடித்து இருந்த குரங்கு தனது பிடியை தளர்த்தியது.

மிருக காட்சி சாலையில் சேட்டை செய்த வாலிபரின் சட்டையை பிடித்து இழுத்த ஒரங்குட்டான் வீடியோ வைஅர்லாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

மிருகக்காட்சிசாலையின் மேலாளர் டெஸ்ரிசல் கூறியதாவது:-

அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்து உள்ளது. விலங்குகளின் அடைப்புகளை நெருங்க வேண்டாம் என்று பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தும் எச்சரிக்கை பலகைகள் இருந்தபோதிலும் ஹசன் எச்சரிக்கைகளை மீறி உள்ளார். அதிகாரிகளின் அனுமதியின்றி வீடியோ எடுக்க ஒராங்குட்டான் கூண்டிற்கு அருகில் சென்று உள்ளார். பார்வையாளர் தடுப்புச்சுவரை தாண்டி குதித்து ஒராங்குட்டானை உதைத்து விதிகளை மீறியிருக்கிறார் என கூறினார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!