கர்ப்ப காலத்தில் 3 ‘G’ நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்!

கர்ப்ப காலம் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு அழகிய பயணமாகவே இருக்கும். கர்ப்பிணி பெண்ணுக்கு தான் எந்த உணவைச் சாப்பிட வேண்டும், எந்த அளவு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும், எந்த உணவுகளை தொடவே கூடாது என்பது பற்றியெல்லாம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் தனக்கும், தன் உடலில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் தேவையான ஊட்டச் சத்துக்கள் என்ன, எவ்வளவு கலோரிகள் அளவு இந்த ஊட்டச் சத்துக்கள் தேவைப்படும், அவை எந்த உணவுகளில் கிடைக்கும் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

கர்ப்ப காலத்தில் ஒரு பெண் தான் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் சுமார் 2200 கலோரி அளவிலான உணவைத் தாண்டி, 300 கலோரிகள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கலோரிகள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் அவசியம். இந்த கலோரிகளை நல்ல சத்து நிறைந்த உணவுகள் மூலம் கிடைக்கப் பெற வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

  • Green leaves – கீரை வகைகள்
  • * Green vegetables – பச்சைக் காய்கறிகள்
  • * Grains – முழு தானியங்கள்

  • * முழு தானியங்கள் என்றால் அதிகம் பாலிஷ் போடாத கோதுமை மற்றும் அரிசி சாதம், கஞ்சி போன்றவை நல்லது. புழுங்கலரிசி உபயோகிப்பது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மல்லிகைப் பூ போன்ற பச்சரிசி சாதம், சத்தில்லாத சக்கைதான். அதிக refine செய்யப்பட்ட ஆட்டா, மைதா போன்றவற்றில் இயற்கையான நார்ச்சத்து இருக்காது.

  • * அதிக காரம், மசாலா பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. கருவுற்ற தாய் நிறையப் பழங்கள் சாப்பிட வேண்டும். இது மலச்சிக்கலைத் தவிர்க்கும். அன்னாசி, பப்பாளி போன்றவை உடலுக்கு நல்லது. அவை சினிமாவிலும் டிவி மொகா தொடர்களிலும்தான் அபார்ஷனை ஏற்படுத்தும்.

  • தினமும் அரை லிட்டர் அளவு பால் குடிப்பது கருவில் உள்ள குழந்தையின் எலும்புகளுக்கு கால்சியம் சத்தை சேர்த்து அவற்றை உறுதிப்படுத்தும். கருவுற்ற முதல் சில மாதங்களுக்கு வாந்தி, மயக்கம் இருக்கலாம். சிலருக்கு அதிகமாக இருக்கும். அச்சமயம் பழ ஜூஸ், வேகவைத்த காய்கறிகள், கஞ்சி வகைகளை அடிக்கடி சாப்பிடலாம்.

  • * கருவுற்ற தாய்க்கு நாக்கில் ருசி மாறும். அதனால்தான் சாம்பல் ருசிக்கிறது. மனத்துக்குப் பிடித்த உணவுகளை வீட்டிலேயே தயாரித்துச் சாப்பிடலாம். எள் உருண்டை, கடலை உருண்டை, பொட்டுக் கடலை உருண்டை போன்றவற்றில் உள்ள வெல்லம் இரும்புச் சத்தை தரும். கடலை, எள்ளு ஆகியவற்றில் உடலுக்கு மிகவும் தேவையான கொழுப்பு அமிலங்கள் (Essential Fatty Acids) உள்ளன. எள், கருச்சிதைவை ஏற்படுத்தாது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!